கிரிக்கெட்

ஐசிசி டெஸ்ட் தரவரிசை: ரஹானே முன்னேற்றம்; 2 வது இடத்தில் கோலி; ஸ்மித் பின்னடைவு + "||" + ICC Test Rankings: Kohli remains second, Rahane climbs to 6th, Ashwin to 7th

ஐசிசி டெஸ்ட் தரவரிசை: ரஹானே முன்னேற்றம்; 2 வது இடத்தில் கோலி; ஸ்மித் பின்னடைவு

ஐசிசி டெஸ்ட் தரவரிசை: ரஹானே முன்னேற்றம்; 2 வது இடத்தில் கோலி; ஸ்மித் பின்னடைவு
870 புள்ளிகளுடன் ஐசிசி டெஸ்ட் தரநிலையில் கேன் வில்லியம்சன் முதலிடம் பிடித்துள்ளார். அஜிங்கிய ரஹானே மெல்போர்ன் டெஸ்ட் அபார சதத்துக்குப் பிறகு 6ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
துபாய்

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் ஸ்டீவ் ஸ்மித்தைப் பின்னுக்குத் தள்ளி நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் முதலிடம் பிடித்துள்ளார்.பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கேன் வில்லியம்சன் 129 ரன்களையும் 21 ரன்களையும் எடுத்ததால் அவர் தரவரிசையில் முதலிடம் பிடித்தார்.

870 புள்ளிகளுடன் ஐசிசி டெஸ்ட் தரநிலையில் கேன் வில்லியம்சன் முதலிடம் பிடித்துள்ளார். அஜிங்கிய ரஹானே மெல்போர்ன் டெஸ்ட் அபார சதத்துக்குப் பிறகு 6ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.   இந்திய டெஸ்ட் தொடரில் 10 ரன்களை மட்டுமே எடுத்த ஸ்மித் 3ம் இடத்துக்கு தள்ளப்பட்டார்.

விராட் கோலி 879 புள்ளிகளுஅன் 2ம் இடம் வகிக்கிறார்.   4 வது இடத்தில் லபுஷேன்  உள்ளார். தொடர்ந்து பாபர் ஆசாம் 5, ரஹானே 6, வார்னர் 7, ஸ்டோக்ஸ் 8, ரூட் 9, புஜாரா 10. என்று  இடம் பெற்று உள்ளனர்.

டெஸ்ட் பவுலிங் தரவரிசையில் 906 புள்ளிகளுடன் பாட் கமின்ஸ் முதலிடம் வகிக்கிறார். பிராட் 845 புள்ளிகளுடன் 2ம் இடத்திலும் நீல் வாக்னர் 833 புள்ளிகளுடன் 3ம் இடத்திலும் டிம் சவுதி 4ம் இடத்திலும் ஸ்டார்க் 5ம் இடத்திலும், ரபாடா 6, அஸ்வின் 7, ஜோஷ் ஹேசில்வுட் 8, பும்ரா 9, ஆண்டர்சன் 10.-ம் இடங்களில் உள்ளனர்.

ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் பென் ஸ்டோக்ஸ் முதலிடம் வகிக்கிறார். ஹோல்டர் 2, ஜடேஜா3, ஷாகிப் அல் ஹசன் 4, ஸ்டார்க் 5-ம் இடத்தில் இருக்க, அஸ்வின் 6ம் இடத்தில் உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. விஜய் ஹசாரே கோப்பை: 94 பந்துகளில் 173 ரன்கள் இசான் கிஷன் சதம்: ஜார்கண்ட் அணி அதிக ரன்கள் குவித்து சாதனை
இசான் கிஷனின் காட்டடி சதத்தில் இந்தூரில் நடந்து வரும் விஜய் ஹசாரே கோப்பையில் மத்தியப்பிரதேசத்துக்கு எதிரான முதல் லீக் ஆட்டத்தில் ஜார்க்கண்ட் அணி 9 விக்கெட் இழப்புக்கு 422 ரன்கள் குவித்து சாத்னை படைத்தது.
2. இங்கிலாந்து தொடரில் தனக்கு ஏற்பட்ட மன அழுத்தம் ; மனந்திறந்த விராட் கோலி
இங்கிலாந்து தொடரில் விராட் கோலி தனக்கு ஏற்பட்ட மன அழுத்தம் தொடர்பாக மனம் திறந்து பேசியுள்ளார்.
3. ஷர்துல் தாக்கூர் நீக்கம்: கடைசி 2 டெஸ்ட் போட்டிகளுக்கான அணி அறிவிப்பு
அகமதாபாத்தில் நடைபெறும் அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
4. யுவேந்திர சாஹல் குறித்து சாதி ரீதியாக பேசியதாக யுவராஜ் சிங் மீது வழக்கு
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் மீது வழக்குப் பதிவு செய்ய்ப்பட்டு உள்ளது. பந்து வீச்சாளர் யுவேந்திர சாஹல் குறித்து சாதி ரீதியாக பேசியதாகக் கூறி அரியானா போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
5. 18 ஆண்டுகளுக்கு பிறகு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டெஸ்ட் தொடரை கைப்பற்றிய பாகிஸ்தான்
கடந்த 18 ஆண்டுகளில் முதல் முறையாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டெஸ்ட் தொடரை பாகிஸ்தான் அணி வென்றுள்ளது