கிரிக்கெட்

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் ஆஸ்திரேலிய பயணம் தள்ளிவைப்பு + "||" + Indian Women cricket team Australian trip postponed

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் ஆஸ்திரேலிய பயணம் தள்ளிவைப்பு

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் ஆஸ்திரேலிய பயணம் தள்ளிவைப்பு
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி இந்த மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட திட்டமிட்டு இருந்தது.
மெல்போர்ன், 

கான்பெர்ரா (ஜன.22), மெல்போர்ன் (ஜன.25), ஹோபர்ட் (ஜன.28) ஆகிய நகரங்களில் இந்த ஆட்டங்கள் நடக்க இருந்தது. இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் கொரோனா இன்னும் முழுமையாக கட்டுக்குள் வராததாலும், சில மாகாணங்களில் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாலும் இந்த போட்டி அடுத்த சீசன் வரை தள்ளிவைக்கப்படுவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது. இதன்படி இனி 2022-ம் ஆண்டில் தான் இந்த போட்டி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அடுத்த சீசனில் இந்திய அணி வருகையின் போது கூடுதலாக மூன்று 20 ஓவர் போட்டிகள் சேர்த்துக்கொள்ளப்படும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி நிக் ஹாக்லே கூறியுள்ளார். கொரோனா பரவலால் கடந்த மார்ச் மாதத்துக்கு பிறகு இந்திய பெண்கள் அணி எந்த சர்வதேச போட்டியிலும் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. இந்திய அணி ஏற்படுத்திய கவனச்சிதறலால் தோல்வியை சந்தித்தோம் புதுமையான காரணத்தை சொல்லும் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன்
நான்கு மாதங்களுக்கு முன்பு சொந்த மண்ணில் இந்தியாவிடம் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் தோல்வி அடைந்ததற்கு புதுமையான காரணத்தை ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் இப்போது கூறியுள்ளார்.
2. கிழக்கு லடாக்கில் இருந்து இந்திய, சீன படைகள் வாபஸ் சுமுகமாக நடக்கிறது; சீனா அறிவிப்பு
கிழக்கு லடாக்கில் இருந்து இந்திய, சீன படைகளை விலக்கிக்கொள்ளும் நடவடிக்கை சுமுகமாக நடந்து வருகிறது என சீனா அறிவித்துள்ளது.