ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா இல்லை + "||" + Biggest positive from Melbourne: Indian players test negative for coronavirus
ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா இல்லை
ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய கிரிக்கெட் அணியினருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
மெல்ர்போன்,
இந்திய கிரிக்கெட் வீரர்களான துணை கேப்டன் ரோகித் சர்மா, சுப்மான் கில், பிரித்வி ஷா, ரிஷாப் பண்ட், நவ்தீப் சைனி ஆகியோர் மெல்போர்னில் உணவு விடுதிக்கு சென்று சாப்பிட்டது சர்ச்சையை கிளப்பியது. அவர்கள் கொரோனா தடுப்பு உயிர் பாதுகாப்பு நடைமுறைகளை மீறினார்களா? என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விசாரித்து வருகிறது.
இதற்கிடையே, இந்திய கிரிக்கெட் அணியினர் அனைவருக்கும் கொரோனா நேற்று ( ஜன.3) கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. விளையாடும் வீரர்கள், பயிற்சியாளர்கள் என அனைவருக்கும் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில், தொற்று பாதிப்பு யாருக்கும் இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.இதனால், வரும் 7 ஆம் தேதி சிட்னியில் நடைபெறும் 3-வது டெஸ்ட் போட்டி திட்டமிட்டபடி நடைபெறுவதில் எந்த சிக்கலும் இருக்காது எனத்தெரிகிறது.
ஆஸ்திரேலியாவின் சுதந்திர தினத்தன்று, இந்திய குடியரசு தினமும் கொண்டாடப்படுவது தற்செயலாக நிகழ்ந்த அதிசயம் என்று ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.