கிரிக்கெட்

3-வது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் இருந்து பேட்டின்சன் விலகல் + "||" + James Pattinson Ruled Out Of 3rd Test

3-வது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் இருந்து பேட்டின்சன் விலகல்

3-வது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் இருந்து பேட்டின்சன் விலகல்
3-வது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் இருந்து பேட்டின்சன் விலகி உள்ளார்.
சிட்னி, 

இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் பேட்டின்சன் காயம் காரணமாக விலகி இருக்கிறார். வீட்டில் விழுந்ததில் விலா பகுதியில் ஏற்பட்ட காயத்தால் 3-வது டெஸ்ட் போட்டிக்கான அணியில் பேட்டின்சன் இடம் பெறமாட்டார் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டிக்கு முன்பு அவர் முழு உடல் தகுதியை எட்டினால் கடைசி டெஸ்டுக்கான அணியில் சேர்க்கப்படுவார் என்றும் கூறப்பட்டுள்ளது. பேட்டின்சனுக்கு பதிலாக மாற்று வீரர் யாரும் அணியில் சேர்க்கப்படவில்லை.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியா-இங்கிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி: இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு
இந்தியா-இங்கிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
2. ஆஸ்திரேலிய அணியுடன் மீண்டும் இணைகிறார், ஸ்டார்க்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் இடக்கை வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் தனது குடும்ப உறுப்பினருக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக இந்தியாவுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் போட்டியுடன் விடுவிக்கப்பட்டார்.