ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இந்திய வீரர் கே.எல் ராகுல் விலகல் + "||" + KL Rahul ruled out of ongoing Test series against Australia due to injury
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இந்திய வீரர் கே.எல் ராகுல் விலகல்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இருந்து காயம் காரணமாக கே.எல் ராகுல் விலகியுள்ளார்.
சிட்னி,
இந்தியா கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 4 டெஸ்ட் கொண்ட தொடரில் 2 டெஸ்ட் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இதில் இரு அணிகளும் ஒரு வெற்றி பெற்றுள்ளது. இதனால், 1-1 என்ற கணக்கில் தொடர் சமநிலையில் உள்ளது. இந்த நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி வரும் 7 ஆம் தேதி சிட்னியில் நடைபெறுகிறது.
இந்த நிலையில், இந்திய அணியில் இருந்து காயம் காரணமாக கே எல் ராகுல் விலகியுள்ளார். மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் வலைப்பயிற்சியில் ஈடுபட்ட போது இடது கையில் காயம் ஏற்பட்டதாக அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கேஎல் ராகுல் உடனடியாக இந்தியா திரும்புவார் எனவும் தெரிகிறது. ஏற்கனவே, இந்திய அணியில் இருந்து காயம் காரணமாக முகம்மது சமி, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், ஆகியோர் காயம் காரணமாகவும் தனிப்பட்ட காரணங்களுக்காக விராட் கோலியும் விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது.