கிரிக்கெட்

3-வது டெஸ்டில் வார்னர் விளையாடுவார் - ஆஸ்திரேலிய பயிற்சியாளர் லாங்கர் பேட்டி + "||" + Australia coach says Warner ‘very likely’ for third test

3-வது டெஸ்டில் வார்னர் விளையாடுவார் - ஆஸ்திரேலிய பயிற்சியாளர் லாங்கர் பேட்டி

3-வது டெஸ்டில் வார்னர் விளையாடுவார் - ஆஸ்திரேலிய பயிற்சியாளர் லாங்கர் பேட்டி
3-வது டெஸ்டில் வார்னர் விளையாடுவார் என்று ஆஸ்திரேலிய பயிற்சியாளர் லாங்கர் தெரிவித்துள்ளார்.
சிட்னி, 

இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நாளை தொடங்க இருப்பதையொட்டி ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

காயத்தால் முதல் இரு டெஸ்டில் விளையாடாத எங்களது தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் 3-வது டெஸ்டில் விளையாட தயாராக இருப்பார் என்று நம்புகிறோம். அவரை பார்க்கும் போது களம் இறங்கும் வாய்ப்பு பிரகாசமாக தெரிகிறது. வார்னர் போராட்ட குணமிக்கவர். மீண்டும் களம் திரும்புவதற்கு சாத்தியமான எல்லா முயற்சிகளையும் அவர் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார் என்பதை ஆரம்பத்தில் இருந்தே சொல்லி இருக்கிறேன். இப்போது நன்றாக ஓடுகிறார். நகர்கிறார். அவர் களம் இறங்குவதில் உறுதியாக இருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடுவது என்றால் வார்னருக்கு மிகவும் பிடிக்கும்.

வார்னர், உள்நாட்டில் முதல்தர கிரிக்கெட்டில் (4 நாள் ஆட்டம்) விளையாடி கிட்டத்தட்ட ஓராண்டாகி விட்டது. ஆனால் சிவப்பு பந்து கிரிக்கெட்டில் கைதேர்ந்தவர். இந்த வகை போட்டிகளை நிறைய விளையாடி இருக்கிறார். அந்த அனுபவம் அவருக்கு உதவிகரமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. பயிற்சி ஆட்டத்தில் பந்து தலையில் தாக்கியதால் பாதிப்புக்குள்ளான இளம் வீரர் வில் புகோவ்ஸ்கி அந்த பாதிப்பில் இருந்து முழுமையாக மீண்டு விட்டார். இதற்கான மருத்துவ நடைமுறைகள் அனைத்தும் முடிந்து விட்டன என்று லாங்கர் கூறினார்.

இதன் மூலம் சிட்னி டெஸ்டில் வார்னரும், புதுமுக வீரர் 22 வயதான புகோவ்ஸ்கியும் தொடக்க ஆட்டக்காரர்களாக அடியெடுத்து வைப்பது உறுதியாகி விட்டது.
Related Tags :