கிரிக்கெட்

இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்டிலும் தென்ஆப்பிரிக்கா வெற்றி: தொடரை கைப்பற்றியது + "||" + South Africa wins 2nd Test against Sri Lanka: wins series

இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்டிலும் தென்ஆப்பிரிக்கா வெற்றி: தொடரை கைப்பற்றியது

இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்டிலும் தென்ஆப்பிரிக்கா வெற்றி: தொடரை கைப்பற்றியது
இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்டிலும் தென்ஆப்பிரிக்கா வெற்றிபெற்று தொடரையும் கைப்பற்றியது.
ஜோகன்னஸ்பர்க், 

தென்ஆப்பிரிக்கா - இலங்கை அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் கடந்த 3-ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இலங்கை 157 ரன்களும், தென்ஆப்பிரிக்கா 302 ரன்களும் எடுத்தன. அடுத்து 145 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இலங்கை அணி 2-வது நாள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 150 ரன்கள் எடுத்திருந்தது.

இந்த நிலையில் 3-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய இலங்கை அணி 2-வது இன்னிங்சில் 211 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக 10-வது சதத்தை நிறைவு செய்த கருணாரத்னே 103 ரன்களில் (128 பந்து, 19 பவுண்டரி) கேட்ச் ஆனார். இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 67 ரன்கள் இலக்கை தென்ஆப்பிரிக்க அணி 13.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி எட்டிப்பிடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது. இந்த வெற்றியையடுத்து தொடரை தென்ஆப்பிரிக்கா 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. 2019-ம் ஆண்டில் தென்ஆப்பிரிக்க அணி சொந்த மண்ணில் இலங்கையிடம் 0-2 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்தது. அதற்கு இப்போது பழிதீர்த்துக் கொண்டது.

Related Tags :

தொடர்புடைய செய்திகள்

1. இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேறியது - ஓட்டெடுப்பை இந்தியா புறக்கணித்தது
ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேறியது. ஓட்டெடுப்பை இந்தியா உள்ளிட்ட 14 நாடுகள் புறக்கணித்தன.
2. இலங்கைக்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட்: வெஸ்ட்இண்டீஸ் அணி வெற்றி தொடரையும் கைப்பற்றியது
இலங்கைக்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் அணி வெற்றி பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது.
3. இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்: வெஸ்ட்இண்டீஸ் அணி எளிதில் வெற்றி
ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதலாவது ஆட்டம் ஆன்டிகுவாவில் நேற்று முன்தினம் நடந்தது.
4. 2-வது டெஸ்ட்: சதம் விளாசினார் அஸ்வின்! - இங்கிலாந்து அணிக்கு 482 ரன்கள் வெற்றி இலக்கு
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் சதம் விளாசி அசத்தினார்.