கிரிக்கெட்

பிசிசிஐ தலைவர் கங்குலி நாளை டிஸ்சார்ஜ்: மருத்துவமனை தகவல் + "||" + #SouravGanguly who is admitted here is doing well. He is clinically fit. He wanted to stay back in the hospital for one more today so he will go home tomorrow: Woodlands Hospital, Kolkata

பிசிசிஐ தலைவர் கங்குலி நாளை டிஸ்சார்ஜ்: மருத்துவமனை தகவல்

பிசிசிஐ தலைவர் கங்குலி நாளை டிஸ்சார்ஜ்: மருத்துவமனை தகவல்
பிசிசிஐ தலைவரும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரருமான கங்குலி நாளை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆவார் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தா,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவருமான சவுரங் கங்குலிக்கு திடீரென நெஞ்சு வலியுடன் தலைசுற்றுதல் மற்றும் வாந்தி ஏற்பட்டு கொல்கத்தாவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் கடந்த 2 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.  

லேசான மாரடைப்பால் பாதிக்கப்பட்ட அவரது இதயத்துக்கு செல்லும் ரத்தக்குழாயில் மூன்று அடைப்புகளில் ஒன்று ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை மூலம் நீக்கப்பட்டது. அவரது உடல் நிலை குறித்து டாக்டர்கள் குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கங்குலி நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று உட்லேண்ட்ஸ் மருத்துவமனை அறிவித்துள்ளது. டில் வைத்தும் கங்குலியின் உடல் நிலை தினசரி கண்காணிக்கப்படும் என்று மருத்துவமனை தெரிவித்துள்ளது. கங்குலியின் உடல் நிலை சீராக உள்ளது, சொந்த விருப்பத்தின் பேரில் இன்று மருத்துவமனையில் இருப்பார் எனவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. இந்திய அணி உலககோப்பையை வென்று 10 ஆண்டு நிறைவு; கவுதம் கம்பீரின் வித்தியாசமான ஆதங்கம்
இந்திய கிரிக்கெட் அணி கடந்த 2011-ம் ஆண்டு சொந்த மண்ணில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட்டில் 28 ஆண்டுகளுக்கு பிறகு மகுடம் சூடியது.