கிரிக்கெட்

சர்ச்சையை கிளப்பும் இந்திய கேப்டன் விராட் கோலியின் தனிப்பட்ட முதலீடுகள் + "||" + Kohli’s Personal Investment Raises Conflict of Interest

சர்ச்சையை கிளப்பும் இந்திய கேப்டன் விராட் கோலியின் தனிப்பட்ட முதலீடுகள்

சர்ச்சையை கிளப்பும் இந்திய கேப்டன் விராட் கோலியின் தனிப்பட்ட முதலீடுகள்
இந்திய கேப்டன் விராட் கோலியின் தனிப்பட்ட முதலீடு சர்ச்சயை எழுப்புகிறது ;இரட்டை ஆதாயம் தேடுவதாக ஒரு குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது.
புதுடெல்லி

விராட் கோலியின் சாதனைகள்  மட்டுமல்ல, அவரது சொத்து மதிப்பும் கடந்த சில ஆண்டுகளில் அபரிதமாக உயர்ந்துள்ளது.  பி.சி.சி.ஐ  ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தங்கள்  ஐ.பி.எல் மற்றும் அவர் செய்துள்ள பல்வேறு முதலீடுகளிலிருந்து கோலி பெரும் தொகை சம்பாதிக்கிறார்.

போர்ப்ஸ் பத்திரிகை அறிவித்த சொத்துப் பட்டியலில், 2019 முதல் விராட் கோலியின் நிகர மதிப்பு ரூ. 196 கோடி ஆகும். இந்த காலகட்டத்தில் கோ லியின் ஒட்டுமொத்த நிகர மதிப்பு சுமார் ரூ. 900 கோடி என்று கணிக்கப்பட்டுள்ளது. சிறப்பாக விளையாடும் இந்திய வீரராக இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து ஆண்டுக்கு 7 கோடி ரூபாய் கோலிக்கு வருமானமாக கிடைக்கிறது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஐபில்  அணி, விராட் கோலிக்கு ரூ.17 கோடி சம்பளம் கொடுத்தது. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் அதிக சம்பளம் வாங்கும் கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் என்ற நிலையை அடைந்துவிட்டார் . இந்த நிலையில் இந்திய கேப்டன் கோலி இரட்டை ஆதாயம் தேடுவதாக ஒரு குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட்கோலி  முதலீடு செய்துள்ள எம்.பி.எல் ஸ்போர்ட்ஸ் இந்திய கிரிக்கெட் அணியின் கிட் ஸ்பான்சராக நியமிக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

2020 ஜனவரியில் கோலி எம்.பி.எல்  ஸ்போர்ட்ஸ்  பிராண்ட் தூதராக நியமிக்கப்பட்டார்.  இதற்காக விராட் கோலிக்கு 68 கட்டாய மாற்றத்தக்க கடன் வழங்கப்பட்டன. ஒவ்வொன்றும் ரூ .48,990 (ரூ. 33.32 லட்சம்) பிரீமியத்தில் வழங்கப்பட்டது. இந்த 10 ஆண்டுகளின் முடிவில் அது பங்குகளாக மாற்றப்படும். 

2020 நவம்பர் 17ஆம் தேதியன்று, எம்.பி.எல் ஸ்போர்ட்ஸை  இந்திய கிரிக்கெட் அணியின் புதிய கிட் ஸ்பான்சர்மற்றும் உத்தியோகபூர்வ வர்த்தக பங்காளராக அறிவித்தது பி.சி.சி.ஐ. இதன்படி, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இந்திய அணியின் ஆண்கள், பெண்கள் மற்றும் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணிகள் எம்.பி.எல் ஜெர்சிகளை அணிந்து விளையாடும். 

தற்போது ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இந்திய கிரிக்கெட் அணி எம்.பி.எல் ஸ்போர்ட்ஸின் ஜெர்சி மற்றும் பிற பொருட்களையும் பயன்படுத்தி வருகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. விஜய் ஹசாரே கோப்பை: 94 பந்துகளில் 173 ரன்கள் இசான் கிஷன் சதம்: ஜார்கண்ட் அணி அதிக ரன்கள் குவித்து சாதனை
இசான் கிஷனின் காட்டடி சதத்தில் இந்தூரில் நடந்து வரும் விஜய் ஹசாரே கோப்பையில் மத்தியப்பிரதேசத்துக்கு எதிரான முதல் லீக் ஆட்டத்தில் ஜார்க்கண்ட் அணி 9 விக்கெட் இழப்புக்கு 422 ரன்கள் குவித்து சாத்னை படைத்தது.
2. இங்கிலாந்து தொடரில் தனக்கு ஏற்பட்ட மன அழுத்தம் ; மனந்திறந்த விராட் கோலி
இங்கிலாந்து தொடரில் விராட் கோலி தனக்கு ஏற்பட்ட மன அழுத்தம் தொடர்பாக மனம் திறந்து பேசியுள்ளார்.
3. ஷர்துல் தாக்கூர் நீக்கம்: கடைசி 2 டெஸ்ட் போட்டிகளுக்கான அணி அறிவிப்பு
அகமதாபாத்தில் நடைபெறும் அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
4. சென்னை கிரிக்கெட் ரசிகர்கள் புத்திசாலிகள்: விராட் கோலி
சென்னை கிரிக்கெட் ரசிகர்கள் புத்திசாலிகள், கிரிக்கெட் மீதான அவர்களின் புரிதல் அபாரமானது என இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
5. யுவேந்திர சாஹல் குறித்து சாதி ரீதியாக பேசியதாக யுவராஜ் சிங் மீது வழக்கு
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் மீது வழக்குப் பதிவு செய்ய்ப்பட்டு உள்ளது. பந்து வீச்சாளர் யுவேந்திர சாஹல் குறித்து சாதி ரீதியாக பேசியதாகக் கூறி அரியானா போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.