கிரிக்கெட்

பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் வெற்றி - தொடரையும் கைப்பற்றியது + "||" + The last Test against Pakistan: New Zealand won the innings and won the series

பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் வெற்றி - தொடரையும் கைப்பற்றியது

பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் வெற்றி - தொடரையும் கைப்பற்றியது
பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது.
கிறைஸ்ட்சர்ச், 

பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் கடந்த 3-ந் தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 297 ரன்களும், நியூசிலாந்து 659 ரன்களும் குவித்தது.362 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் அணி 3-வது நாள் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 8 ரன் எடுத்து தோல்வியின் பாதைக்கு தள்ளப்பட்டது.

இந்த நிலையில் 4-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள், நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர்களின் துல்லியமான தாக்குதலை தாக்குப்பிடிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். முதல் இன்னிங்சில் கலக்கிய வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜாமிசன் இந்த இன்னிங்சிலும் விக்கெட் வேட்டை நடத்தினார்.

தேனீர் இடைவேளைக்கு பிறகு பாகிஸ்தான் அணி 2-வது இன்னிங்சில் 81.4 ஓவர்களில் 186 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 176 ரன்கள் வித்தியாசத்தில் ‘மெகா’ வெற்றியை ருசித்தது. அதிகபட்சமாக அசார் அலி, ஜாபர் கோஹர் தலா 37 ரன்கள் எடுத்தனர். நியூசிலாந்து தரப்பில் கைல் ஜாமிசன் 6 விக்கெட்டும், டிரென்ட் பவுல்ட் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 11 விக்கெட்டுகளை சாய்த்த நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜாமிசன் ஆட்டநாயகன் விருதையும், இந்த தொடரில் ஒரு இரட்டை சதம், ஒரு சதம் உள்பட 388 ரன்கள் குவித்த நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் தொடர் நாயகன் விருதையும் பெற்றனர். இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாக சொந்தமாக்கியது.

நியூசிலாந்து அணி டெஸ்ட் போட்டியில் தொடர்ச்சியாக பெற்ற 6-வது வெற்றி இதுவாகும். இதற்கு முன்பு (2005-2006-ம் ஆண்டில்) அந்த அணி 5 போட்டியில் தொடர்ச்சியாக வென்றதே அதிகபட்சமாக இருந்தது. அத்துடன் சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 17 டெஸ்ட் போட்டியில் தோல்வியை சந்தித்ததில்லை என்ற பெருமையையும் தக்கவைத்துக் கொண்டது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு உட்பட்ட இந்த தொடரை வென்றதன் மூலம் நியூசிலாந்து அணி 120 புள்ளிகளை அள்ளியது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிபட்டியலில் நியூசிலாந்து அணி மொத்தம் 420 புள்ளிகள் குவித்து முதலிடத்துக்கு முன்னேறியது. இந்திய அணி 390 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், ஆஸ்திரேலிய அணி 322 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் இருக்கின்றன.

ஆனால் இந்த சீசனில் புள்ளி வித்தியாசம் சதவீதத்தின் அடிப்படையில் பார்க்கப்படுவதால், ஆஸ்திரேலியா (76.7 சதவீதம்) முதலிடத்தையும், இந்தியா (72.2) 2-வது இடத்தையும், நியூசிலாந்து (70) 3-வது இடத்தையும் பெற்றுள்ளன.

Related Tags :

தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தானில் பேருந்து விபத்து: 13 பேர் பலி; 25 பேர் காயம்
பாகிஸ்தானில் பயணிகள் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 13 பேர் உயிரிழந்தனர்.
2. பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு 8 லட்சத்தை கடந்தது
இந்தியாவில் கொரோனா வைரஸ் 2-வது அலை கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில், அண்டை நாடான பாகிஸ்தானில் கொரோனா வைரசின் 3-வது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
3. பாகிஸ்தான் அறிமுக வீரர் வீசிய பவுன்ஸரில் ஜிம்பாப்வே பேட்ஸ்மேனின் ஹெல்மெட் இரண்டாக உடைந்தது
பாகிஸ்தான் அறிமுக வீரர் வீசிய அதிவேக பவுன்ஸரில் ஜிம்பாப்வே பேட்ஸ்மேனின் ஹெல்மெட் இரண்டாக உடைந்தது.
4. 20 ஓவர் கிரிக்கெட்: ஜிம்பாப்வே அணியிடம் பாகிஸ்தான் அதிர்ச்சி தோல்வி
பாகிஸ்தான்-ஜிம்பாப்வே அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஹராரேயில் நேற்று நடந்தது.
5. சீன தூதர் - உயர் மட்ட அதிகாரிகள் தங்கி இருந்த பாகிஸ்தான் ஓட்டலில் வெடிகுண்டு தாக்குதல் 5 பேர் பலி
சீன தூதர் - உயர் மட்ட அதிகாரிகள் தங்கி இருந்த பாகிஸ்தான் ஓட்டலில் வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்று உள்ளது இதில் 5 பேர் பலியானார்கள். 12 பேர் படுகாயம் அடைந்தனர்.