கிரிக்கெட்

தந்தையின் நினைவால் மைதானத்தில் கண்கலங்கிய இந்திய பந்துவீச்சாளர் முகமது சிராஜ் + "||" + Indian bowler Mohammad Siraj gets emotional at the stadium in memory of his father

தந்தையின் நினைவால் மைதானத்தில் கண்கலங்கிய இந்திய பந்துவீச்சாளர் முகமது சிராஜ்

தந்தையின் நினைவால் மைதானத்தில் கண்கலங்கிய இந்திய பந்துவீச்சாளர் முகமது சிராஜ்
வெற்றியை தந்தைக்கு அஞ்சலியாக செலுத்துவேன் எனக்கூறி முகமது சிராஜ் மைதானத்தில் கண்கலங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
சிட்னி,

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையான 3வது  டெஸ்ட் போட்டி  சிட்னி மைதானத்தில் இன்று நடைபெற்றது. போட்டி தொடங்குவதற்கு முன் வீரர்கள் மைதானத்தில் வரிசையாக நிற்க, இருநாட்டின் தேசிய கீதங்களும் ஒலிக்கப்படும்.

இந்திய தேசியக் கீதம் ஒலித்தபோது, மெல்போர்ன் போட்டியில் அறிமுகம் ஆன முகமது சிராஜ் கண்கலங்கினார். அப்போது முன்னாள் வீரர்களான முகமது கைஃப், ஜஸ்பிரிட் பும்ரா ஆகியோர் முகமது சிராஜ்-க்கு ஆறிதல் கூறினர்.

ஆஸ்திரேலியா தொடர் தொடங்குவதற்கு முன் முகமது சிராஜின் தந்தை காலமானார். ஆனால் அதற்காக இந்தியா திரும்பாமல் தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலேயே தங்கியிருந்த சிராஜ், மெல்போர்ன் டெஸ்டில் அறிமுகம் ஆகி சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தி அனைவரது ஆதரவையும் பெற்றார். 

இது குறித்து முகமது சிராஜ் கூறுகையில், “நான் கிரிக்கெட் விளையாடினால் என் தந்தைக்கு மிகவும் பிடிக்கும். இந்த தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தியாவை வெற்றி பெற செய்து, அந்த வெற்றியை தந்தைக்கு அஞ்சலியாக செலுத்துவேன்” என்று அவர் தெரிவித்தார்.