கிரிக்கெட்

பிப்ரவரி 11-ந்தேதி ஐ.பி.எல். வீரர்கள் ஏலம்? + "||" + IPL on February 11 Players bid?

பிப்ரவரி 11-ந்தேதி ஐ.பி.எல். வீரர்கள் ஏலம்?

பிப்ரவரி 11-ந்தேதி ஐ.பி.எல். வீரர்கள் ஏலம்?
13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் கடந்த ஆண்டு செப்டம்பர் 19-ந் தேதி முதல் நவம்பர் 10-ந்தேதி வரை வெற்றிகரமாக நடந்தது.
மும்பை, 

கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிவைக்கப்பட்ட 13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் கடந்த ஆண்டு செப்டம்பர் 19-ந் தேதி முதல் நவம்பர் 10-ந்தேதி வரை வெற்றிகரமாக நடந்தது. 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா ஏப்ரல், மே மாதங்களில் நடத்தப்பட வேண்டும். அதற்குள் இந்தியாவில் கொரோனா தாக்கம் கட்டுக்குள் வராவிட்டால் இந்த முறையும் அமீரகத்துக்கு மாற்றப்படும்.

இதையொட்டி ஐ.பி.எல். வீரர்களுக்கான ஏலம் அடுத்த மாதம் (பிப்ரவரி) 11-ந்தேதி நடத்தப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையே முதலாவது டெஸ்ட் பிப்ரவரி 5-ந்தேதி முதல் 9-ந்தேதி வரையும், 2-வது டெஸ்ட் பிப்ரவரி 13-ந்தேதி முதல் 17-ந்தேதி வரையும் சென்னையில் நடக்கிறது. இவ்விரு டெஸ்டுக்கும் இடைப்பட்ட நாளில் ஏலத்தை நடத்த ஐ.பி.எல். ஆட்சிமன்ற குழு திட்டமிட்டுள்ளது. ஆனால் ஏலம் நடக்கும் இடம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. ஒவ்வொரு அணி நிர்வாகமும் தக்கவைக்கும் மற்றும் விடுவிக்கும் வீரர்களின் பட்டியலை ஐ.பி.எல். நிர்வாகத்துக்கு வருகிற 21-ந்தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். பரஸ்பர அடிப்படையிலான வீரர்கள் பரிமாற்றம் பிப்ரவரி 4-ந்தேதி நிறைவடையும் என்று ஐ.பி.எல். சேர்மன் பிரிேஜஷ் பட்டேல் நேற்று தெரிவித்தார். ஒவ்வொரு அணிக்குரிய வீரர்களுக்கான செலவுத் தொகை ரூ.85 கோடி இந்த ஆண்டு அதிகரிக்கப்படாது என்றும் அவர் குறிப்பிட்டார். கடந்த ஐ.பி.எல். போட்டியில் முதல்முறையாக லீக் சுற்றுடன் நடையை கட்டிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த முறை நிறைய வீரர்களை கழற்றி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.