கிரிக்கெட்

சிட்னி டெஸ்ட்: ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித் சதம் + "||" + Steve Smith brings up his 27th Test ton.

சிட்னி டெஸ்ட்: ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித் சதம்

சிட்னி டெஸ்ட்:  ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித் சதம்
இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித் சதம் விளாசினார்.
சிட்னி,

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நேற்று தொடங்கியது.  டாஸ் ஜெயித்த ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். 

நேற்றைய ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 55 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 166 ரன்கள் எடுத்தது.  லபுஸ்சேன் 67 ரன்களுடனும் (149 பந்து, 8 பவுண்டரி), ஸ்மித் 31 ரன்களுடனும் (64 பந்து, 5 பவுண்டரி) களத்தில் இருந்தனர். 

இந்த நிலையில்,  2 ஆம் நாள் ஆட்டம் இன்று துவங்கியதும் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் பும்ரா, ஜடேஜாவின் துல்லிய பந்துவீச்சால் நிலை தடுமாறினர். லபுஸ்சேன் 91 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுபுறம் ஸ்மித் நங்கூரம் போல நிலைத்து நின்று ரன்வேட்டையில் ஈடுபட்டார். அபாரமாக ஆடிய ஸ்மித் சதம் விளாசினார். 

சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஸ்மித் அடிக்கும் 27-வது சதம் இதுவாகும். 100 ஓவர்கள் நிலவரப்படி ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 299 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்மித் 103 ரன்களுடனும் ஸ்டார்க் 15  ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

1. சிட்னி டெஸ்டில் கடைசி நாளில் ‘நாங்கள் போராடிய விதம் மகிழ்ச்சி அளிக்கிறது’ - ரஹானே பேட்டி
சிட்னி டெஸ்ட் போட்டியில் கடைசி நாளில் நாங்கள் போராடிய விதம் மகிழ்ச்சி அளிக்கிறது என்று இந்திய அணியின் பொறுப்பு கேப்டன் ரஹானே தெரிவித்தார்.
2. தொடரில் முன்னிலை பெறப்போவது யார்? : இந்தியா-ஆஸ்திரேலியா 3-வது டெஸ்ட் சிட்னியில் இன்று தொடக்கம்
இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் 3-வது டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று தொடங்குகிறது.
3. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இந்திய வீரர் கே.எல் ராகுல் விலகல்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இருந்து காயம் காரணமாக கே.எல் ராகுல் விலகியுள்ளார்.
4. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இந்திய அணியில் நடராஜன் சேர்ப்பு
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ள இந்திய அணியில் நடராஜனுக்கு இடம் கிடைத்துள்ளது.
5. மெல்போர்ன் டெஸ்ட்: 112 ரன்களில் ரகானே ரன் அவுட்
3 ஆம் நாள் ஆட்டம் துவங்கிய சிறிது நேரத்தில் கேப்டன் ரகானே (112 ரன்கள்) ரன் அவுட் மூலம் ஆட்டமிழந்தார்.