விக்கெட்டுகள் வீழ்த்தியதை விடவும் ஸ்டீவன் சுமித்தின் ரன்-அவுட்டை தான் மீண்டும், மீண்டும் பார்க்க விரும்புவேன் - ஜடேஜா


விக்கெட்டுகள் வீழ்த்தியதை விடவும் ஸ்டீவன் சுமித்தின் ரன்-அவுட்டை தான் மீண்டும், மீண்டும் பார்க்க விரும்புவேன் - ஜடேஜா
x
தினத்தந்தி 8 Jan 2021 11:53 PM GMT (Updated: 8 Jan 2021 11:53 PM GMT)

4 விக்கெட்டுகள் வீழ்த்தியதை விடவும் ஸ்டீவன் சுமித்தின் ரன்-அவுட்டை தான் மீண்டும், மீண்டும் பார்க்க விரும்புவேன் என்று இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா தெரிவித்தார்.

சிட்னி,

* இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா நேற்று அளித்த பேட்டியில், ‘சிட்னி டெஸ்டில் 4 விக்கெட்டுகள் வீழ்த்தியதை விடவும் ஸ்டீவன் சுமித்தின் ரன்-அவுட்டை தான் மீண்டும், மீண்டும் பார்க்க விரும்புவேன். ரன்-அவுட் செய்ததில் எனது மிகச்சிறந்த முயற்சி இது. அதுவும் பீல்டிங்கில் 30 யார்டு வட்டத்துக்கு வெளியே இருந்து எறிந்த பந்து நேரடியாக ஸ்டம்பில் பட்டது. இது போன்ற தருணங்கள் நமக்கு திருப்தியை கொடுக்கும்’ என்றார்.

* சிட்னி டெஸ்டில் 2-வது நாள் ஆட்டம் குறித்து இந்திய முன்னாள் அதிரடி வீரர் ஷேவாக் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘பந்து வீச்சிலும், பீல்டிங்கிலும் ஜடேஜா பிரமாதமாக செயல்பட்டார். சுமித்தை ரன்-அவுட் செய்தது அற்புதம். சுப்மான் கில் உண்மையிலேயே நேர்த்தியாக ஆடினார். அவரது நிதானமும், பின்னங்காலை நகர்த்தி ஆடும் விதமும் அருமையாக இருந்தது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

*அபுதாபியில் விரைவில் நடக்க உள்ள 10 ஓவர் லீக் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் வெஸ்ட் இண்டீஸ் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் அளித்த ஒரு பேட்டியில், ‘ஒலிம்பிக்கில் 10 ஓவர் வடிவிலான கிரிக்கெட் போட்டியை பார்க்க மிகவும் விரும்புகிறேன். அவ்வாறு நடந்தால் அது விளையாட்டில் மிகப்பெரிய விஷயமாக இருக்கும்’ என்றார்.

*கொரோனா பரவலால் இரண்டு முறை தள்ளிவைக்கப்பட்ட இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்துக்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 3-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடைசியாக கடந்த டிசம்பர் 18-ந் தேதி குர்கயானில் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டு கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட போது, தலைவர் பதவிக்கு அஜய் சிங்கை எதிர்த்து போட்டியிட மும்பை கிரிக்கெட் சங்க முன்னாள் தலைவரும், பாரதீய ஜனதா கட்சி எம்.எல்.ஏ.வுமான ஆஷிஷ் ஷெலார் வேட்பு மனு தாக்கல் செய்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story