கிரிக்கெட்

ஆஸ்திரேலியா - இந்தியா : 3-வது டெஸ்ட் போட்டியும்... சுவராசியமான சம்பவங்களும்... + "||" + Australia - India: 3rd Test match and interesting events ...

ஆஸ்திரேலியா - இந்தியா : 3-வது டெஸ்ட் போட்டியும்... சுவராசியமான சம்பவங்களும்...

ஆஸ்திரேலியா - இந்தியா : 3-வது டெஸ்ட் போட்டியும்...  சுவராசியமான  சம்பவங்களும்...
ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி டிரா ஆனாலும் பரப்பரப்புக்கு பஞ்சமில்லாமல் பல சுவராசியமான சம்பவங்கள் நடந்து உள்ளன
சிட்னி: 

ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்றது. டாஸ் தோற்ற பின்னரும், இந்தியா சிறப்பாக விளையாடி போட்டியை டிரா செய்தது. ஆனால், இந்திய அணி வீரர்கள் காயம் அடைந்தது சற்று கவலை அளிக்கும் விதமாக உள்ளது. மேலும் இந்த போட்டியில் பல சுவராசியமான சம்பவங்கள் நடந்து உள்ளன. அவை வருமாறு:-

ஆடு மாமா ..கவலப்படாதா… 

இரண்டாவது இன்னிங்சில் தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் மற்றும் ஆந்திராவை சேர்ந்த ஹனுமா விஹாரி ஆகியோர் ஜோடி சேர்ந்து பேட்டிங் செய்தனர். அப்போது, விஹாரியுடன் அஸ்வின் தமிழில் பேசினார்.

ஆடு மாமா ..கவலப்படாதா… பால் நேரா தான் வரும்.. பத்து பத்து பாலா பார்த்துக்கலாம் என விஹாரியிடம் அஸ்வின் தமிழில் பேசியது ஸ்டெம்ப் மைக்கில் பதிவாகியுள்ளது. இவை தற்போது இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.



சுமித்தின் மோசமான செயல்

வீரர்கள் களம் இறங்கியதும் மூன்று ஸ்டம்ப்களில் எதில் நின்று விளையாட வேண்டும் என்பதற்காக கிரீஸ் கார்டு எடுப்பார்கள். எடுத்து அதில் அடையாளத்திற்கான ஒரு கோட்டை போடுவார்கள். அப்போதுதான் எங்கு நின்று விளையாடுகிறோம் என்பது பேட்ஸ்மேன்களுக்கு தெரியும். முதல் செசனுக்கனா கூல்டிரிங்ஸ் இடைவேளையின்போது ரிஷப் பண்ட் குளிர்பானம் அருந்திவிட்டு வந்தார். அதற்குள் ஸ்டீவ் சுமித், பேட்ஸ்மேன் இடத்திற்கு வந்து ரிஷப் பண்ட் ஆடுவது போன்று சைகை காட்டினார்.

அதன்பின் காலால் ரிஷப் பண்ட் ஏற்படுத்தி வைத்த க்ரீஸ் கார்டை காலால் சுரண்டி அழித்தார். பின்னர் ரிஷப் பண்ட் பேட்டிங் செய்ய வரும்போது எடுத்து வைத்திருந்த கிரீஸ் கார்டு அழிக்கப்பட்டிருந்ததை கண்டார். அவர் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் புதிதாக கிரீஸ் கார்டு எடுத்து விளையைாடினார். சிறப்பாக விளையாடிய ரிஷப் பண்ட் 97 ரன்னில் வெளியேறினார். ஸ்மித்தின் இந்த செயலை ரசிகர்கள் டுவிட்டரில் கண்டித்து வருகிறார்கள்.

டிம் பெயினுக்கு பதிலடி கொடுத்த அஸ்வின்

டிம் பெயின் கூறுகையில்,  ’காத்திருக்க முடியவில்லை. காபாவுக்கு (பிரிஸ்பென் மைதானத்தின் புனைப்பெயர்) வாருங்க... உங்களுடன் விளையாட மிகுந்த ஆவலாக உள்ளோம் அஸ்வின்’ என்றார்.

டிம் பெயினின் கருத்துக்கு உடனடியாக பதிலடி கொடுத்த அஸ்வின், ‘அதேபோல் தான் நீங்கள் இந்தியாவுக்கு வாருங்க... உங்களுடன் நாங்கள் விளையாட ஆவலாக உள்ளோம். அதுதான் உங்கள் கடைசி டெஸ்ட் தொடராக இருக்கும்’ என்று பதிலடி கொடுத்துள்ளார்.

புஜாரா, ரிஷப் பண்ட், அஸ்வின் ஆகியோர் இந்திய அணிக்கு முக்கியமானவர்கள் என்பதை உணர்வார்கள் என்று நம்புகிறேன். டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 3-வது இடத்தில் களம் இறங்கி தரமான பந்து வீச்சை எப்போதும் எதிர்கொள்வது சாதாரண விஷயம் அல்ல.... கிட்டதட்ட 400 விக்கெட்டுகள் எளிமையாக கிடைக்கவில்லை.. இந்தியா சிறப்பாக எதிர்கொண்டது... தொடரை வெல்வதற்கான நேரம்’’ எனப்பதிவிட்டுள்ளார்.

இனவெறியை துாண்டும் பேச்சு

மூன்றாவது நாளில்  ஆஸ்திரேலியா அணிபேட்டிங்கின் போது  பவுண்டரி எல்லையில் பீல்டிங் செய்து கொண்டிருந்த இந்திய வீரர்கள் சிராஜ், பும்ராவை பார்த்து, கேலரியில் இருந்த ரசிகர்கள் சிலர், இனவெறியை துாண்டும் வகையில்  திட்டினார். இது குறித்து அவர்கள் ரஹானேவிடம் தெரிவிக்க, உடனே ரஹானே நடுவர்களிடம் புகார் தெரிவிக்க, போட்டி முடிந்த பின், நீண்ட நேரம் இந்திய வீரர்கள் நடுவர்களிடம் பேசிக் கொண்டிருந்தனர். இதன் பின் இந்திய கிரிக்கெட் போர்டு சார்பில், ஆஸ்திரேலியாவிடம் முறைப்படி புகார் அளிக்கப்பட்டது.

நான்காம் நாளும்  இந்திய வீரர்களை, ஆஸ்திரேலியா ரசிகர்கள் இனவெறியை தூண்டும் வகையில் விமர்சனம் செய்தனர்.இதனையடுத்து கவனத்தை ஈர்க்கும் வகையில், முகமது சிராஜ், பவுலிங் செய்வதை நிறுத்தினார். கேப்டன் ரஹானே, சிராஜிடம் பேசிய பிறகு, நடுவர்களிடம் புகார் அளித்தார்.தொடர்ந்து மைதான பாதுகாப்பு அதிகாரிகளை, ரசிகர்களை மைதானத்தில் இருந்து வெளியேற்றினர். இதன் பின்னரே போட்டி மீண்டும் துவங்கியது. இதனால், மைதானத்தில் பரபரப்பு நிலவியது.

மன்னிப்பு கோரியா ஆஸ்திரேலியா

இதனை தொடர்ந்து ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இனரீதியாக தாக்குதல் நடத்துபவர்களை ஆஸ்திரேலியா கிரிக்கெட் ஒரு போதும் அனுமதிக்காது. வரவேற்காது.தரக்குறைவாக நடந்து கொண்டவர்களை வன்மையாக கண்டிக்கிறோம். சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக ஐசிசி விசாரணை நடத்தி வருகிறது. அதன் முடிவுக்காக காத்திருக்கிறோம். இந்திய வீரர்களை திட்டியவர்கள் மீது கடும் தண்டனை எடுப்பதுடன், அவர்கள் நீண்ட காலம் தடை விதிப்பது, போலீசாரிடம் ஒப்படைப்பது குறித்தும் பரிசீலனை செய்யப்படும்.இந்த விவகாரத்தை நாங்கள் மிகவும் தீவிரத்துடன் அணுகுவோம். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து எங்களின் விதிப்படி ஆஸ்திரேலியா மைதானங்களில், இனி அந்த நபர்களை அனுமதிக்க மாட்டோம்.இந்திய கிரிக்கெட் அணியினரிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறோம். இந்த விஷயத்தில் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கிறோம் என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. விஜய் ஹசாரே கோப்பை: 94 பந்துகளில் 173 ரன்கள் இசான் கிஷன் சதம்: ஜார்கண்ட் அணி அதிக ரன்கள் குவித்து சாதனை
இசான் கிஷனின் காட்டடி சதத்தில் இந்தூரில் நடந்து வரும் விஜய் ஹசாரே கோப்பையில் மத்தியப்பிரதேசத்துக்கு எதிரான முதல் லீக் ஆட்டத்தில் ஜார்க்கண்ட் அணி 9 விக்கெட் இழப்புக்கு 422 ரன்கள் குவித்து சாத்னை படைத்தது.
2. இங்கிலாந்து தொடரில் தனக்கு ஏற்பட்ட மன அழுத்தம் ; மனந்திறந்த விராட் கோலி
இங்கிலாந்து தொடரில் விராட் கோலி தனக்கு ஏற்பட்ட மன அழுத்தம் தொடர்பாக மனம் திறந்து பேசியுள்ளார்.
3. ஷர்துல் தாக்கூர் நீக்கம்: கடைசி 2 டெஸ்ட் போட்டிகளுக்கான அணி அறிவிப்பு
அகமதாபாத்தில் நடைபெறும் அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
4. யுவேந்திர சாஹல் குறித்து சாதி ரீதியாக பேசியதாக யுவராஜ் சிங் மீது வழக்கு
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் மீது வழக்குப் பதிவு செய்ய்ப்பட்டு உள்ளது. பந்து வீச்சாளர் யுவேந்திர சாஹல் குறித்து சாதி ரீதியாக பேசியதாகக் கூறி அரியானா போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
5. 18 ஆண்டுகளுக்கு பிறகு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டெஸ்ட் தொடரை கைப்பற்றிய பாகிஸ்தான்
கடந்த 18 ஆண்டுகளில் முதல் முறையாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டெஸ்ட் தொடரை பாகிஸ்தான் அணி வென்றுள்ளது