கிரிக்கெட்

முஷ்டாக் அலி 20 ஓவர் கிரிக்கெட்: அசாமை பந்தாடியது தமிழக அணி + "||" + Mushtaq Ali 20 over cricket: Assam bowled by Tamil Nadu team

முஷ்டாக் அலி 20 ஓவர் கிரிக்கெட்: அசாமை பந்தாடியது தமிழக அணி

முஷ்டாக் அலி 20 ஓவர் கிரிக்கெட்: அசாமை பந்தாடியது தமிழக அணி
சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அசாமை பந்தாடியது.
பெங்களூரு, 

12-வது சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் 6 நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 38 அணிகள் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன.

பெங்களூருவில் நேற்று நடந்த ‘ஏ’ பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் கர்நாடக அணி, பஞ்சாப்பை எதிர்கொண்டது. முதலில் பேட் செய்த கர்நாடக அணி, பஞ்சாப் வீரர்களின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறியது. 20 ஓவர்களில் கர்நாடக அணி 8 விக்கெட்டுக்கு 125 ரன்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டது. தேவ்தத் படிக்கல் 19 ரன்னிலும், கருண்நாயர் 13 ரன்னிலும் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தனர். பஞ்சாப் தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் சித்தார்த் கவுல் 26 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதில் 17-வது ஓவரில் ‘ஹாட்ரிக்’ விக்கெட்டுகள் அள்ளியதும் அடங்கும்.

பின்னர் ஆடிய பஞ்சாப் அணி 14.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 127 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பஞ்சாப் அணி தொடர்ச்சியாக பெற்ற 2-வது வெற்றி இதுவாகும். கர்நாடக அணிக்கு இது முதல் தோல்வியாகும்.

கொல்கத்தாவில் அரங்கேறிய ‘பி’ பிரிவு ஆட்டம் ஒன்றில் பெங்கால் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் ஜார்கண்ட் அணியை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது.. முதலில் ஆடிய பெங்கால் 6 விக்கெட்டுக்கு 161 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர் விவேக் சிங் 64 பந்துகளில் 13 பவுண்டரி, 3 சிக்சருடன் 100 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். அடுத்து ஆடிய ஜார்கண்ட் அணி 9 விக்கெட்டுக்கு 145 ரன்கள் எடுத்து அடங்கி 2-வது தோல்வியை சந்தித்தது.

இதே பிரிவில் நடந்த மற்றொரு லீக் ஆட்டத்தில் தமிழக அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அசாமை துவசம் செய்து 2-வது வெற்றியை தனதாக்கியது. இதில் முதலில் ஆடிய அசாம் 7 விக்கெட்டுக்கு 126 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய தமிழக அணி 15 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 128 ரன்கள் சேர்த்து அசத்தியது. ஹரி நிஷாந்த் 47 ரன்களும் (40 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்), ஜெகதீசன் 78 ரன்களும் (50 பந்து, 8 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசினர்.

தொடர்புடைய செய்திகள்

1. அசாமில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.0 ஆக பதிவு
அசாமில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.0 ஆக பதிவாகியுள்ளது.
2. அசாமில் மீண்டும் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு
அசாமில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 3.5 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
3. கேரளா, அசாம், மேற்கு வங்காளத்தில் வாக்குப்பதிவு தொடங்கியது
கேரளா, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய மூன்று மாநிலங்களில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
4. ‘வளர்ச்சிக்கான செயல்திட்டம், காங்கிரசிடம் இல்லை’; அசாமில் அமித்ஷா இறுதிக்கட்ட பிரசாரம்
வளர்ச்சிக்கான செயல்திட்டம் காங்கிரசிடம் இல்லை என்று அசாமில் இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரம் செய்த அமித்ஷா குறிப்பிட்டார்.
5. ‘அசாம் சுய சார்பு அடைய போராட்டப்பாதையில் இருந்து திரும்புங்கள்’; தேர்தல் பிரசாரத்தில் போராளிகளுக்கு மோடி அழைப்பு
அசாமில் தேர்தல் பிரசாரம் செய்த பிரதமர் மோடி, மாநிலம் சுய சார்பு அடைவதற்கு போராளிகள் போராட்டப் பாதையில் இருந்து பொதுவான நீரோட்டத்துக்கு திரும்ப வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை