ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி; இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இடம்பிடித்துள்ளனர் + "||" + 4th Test against Australia; Natarajan and Washington Sunder from Tamil Nadu are in the Indian team
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி; இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இடம்பிடித்துள்ளனர்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இடம்பிடித்துள்ளனர்
பிரிஸ்பேன்,
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் அடிலெய்டில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியாவும், மெல்போர்னில் நடந்த 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. சிட்னியில் நடந்த 3-வது டெஸ்ட் டிராவில் முடிந்தது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் நீடிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள கப்பா ஸ்டேடியத்தில் இன்று தொடங்குகியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் டிம் பெய்ன் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதன்படி இந்திய அணி பந்து வீச்சைத் துவங்கியுள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் அறிமுக வீரராக தமிழக வீரர் நடராஜன் களம் இறங்குகி உள்ளார். மேலும் சுழற்பந்து வீச்சாளராக தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரும் கடைசி டெஸ்ட் போட்டியில் அறிமுகமாக இடம்பிடித்துள்ளார்.