கிரிக்கெட்

முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட்டில் மும்பை அணிக்காக களம் இறங்கிய தெண்டுல்கர் மகன் ஒரு விக்கெட் வீழ்த்தினார் + "||" + Mushtaq Ali Cup in cricket For the Mumbai team Tendulkar son who landed on the field

முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட்டில் மும்பை அணிக்காக களம் இறங்கிய தெண்டுல்கர் மகன் ஒரு விக்கெட் வீழ்த்தினார்

முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட்டில் மும்பை அணிக்காக களம் இறங்கிய தெண்டுல்கர் மகன்  ஒரு விக்கெட் வீழ்த்தினார்
38 அணிகள் பங்கேற்றுள்ள 12-வது சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
மும்பை, 

இதில் ‘இ’ பிரிவில் மும்பையில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் மும்பை-அரியானா அணிகள் மோதின. முதலில் பேட் செய்த மும்பை அணி 19.3 ஓவர்களில் 143 ரன்னில் முடங்கியது. கேப்டன் சூர்யகுமார் யாதவ் உள்பட 4 வீரர்கள் டக்-அவுட் ஆனார்கள். தொடர்ந்து ஆடிய அரியானா 17.4 ஓவர்களில் இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தின் மூலம் சீனியர் 20 ஓவர் கிரிக்கெட்டில் அறிமுக வீரராக மும்பை அணிக்காக இறங்கிய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரின் மகனான இடக்கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஜூன் தெண்டுல்கர் 3 ஓவர்களில் 34 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் எடுத்தார். முன்னதாக பேட்டிங்கின் போது அவருக்கு பந்தை எதிர்கொள்ள வாய்ப்பு கிடைக்கவில்லை. தொடர்ந்து 3-வது தோல்வியை தழுவிய மும்பை அணி கால்இறுதி வாய்ப்பை பறிகொடுத்துள்ளது.