கிரிக்கெட்

ஹர்திக் பாண்டியாவின் தந்தை மாரடைப்பால் காலமானார் + "||" + Hardik Pandya's father passed away due to cardiac arrest

ஹர்திக் பாண்டியாவின் தந்தை மாரடைப்பால் காலமானார்

ஹர்திக் பாண்டியாவின் தந்தை மாரடைப்பால் காலமானார்
ஹர்திக் மற்றும் க்ருனால் பாண்டியாவின் தந்தை ஹிமான்ஷு பாண்டியா மாரடைப்பால் உயிரிழந்தார்.
மும்பை,

இந்திய கிரிக்கெட் வீரர்களும், சகோதரர்களுமான ஹர்திக் பாண்டியா மற்றும் க்ருனால் பாண்டியாவின் தந்தை ஹிமான்ஷு பாண்டியா மாரடைப்பால் உயிரிழந்தார். தற்போது ஹர்திக் பாண்டியா எந்த கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடாத நிலையில் க்ருனால் பாண்டியா சையது முஷ்டாக் அலி டி20 தொடரில் பரோடா கிரிக்கெட் அணி கேப்டனாக ஆடி வருகிறார். 

இந்த தொடரில் விளையாடுவதற்காக அணி வீரர்கள் அனைவரும் கொரோனா தொற்று ஏற்படாத வண்ணம் தனிமைப்படுத்துதலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தந்தை காலமானதால் தற்போது க்ருனால் பாண்டியா தொடரில் இருந்து விலகியுள்ளார். இந்த தகவலை பரோடா கிரிக்கெட் வாரியம் உறுதிப்படுத்தியுள்ளது. 

ஹிமான்ஷு பாண்டியா தனது மகன்கள் இருவரும் சிறுவயதிலேயே கிரிக்கெட் விளையாட உறுதுணையாக இருந்தவர் ஆவார். இது குறித்து பேட்டி ஒன்றில் பேசிய போது, தனது மகன்களின் கிரிக்கெட் கனவை நிறைவேற்ற பல தடைகளை கடந்து வந்ததாகவும், அவர்கள் தற்போது வெற்றியடைந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் ஹிமான்ஷு பாண்டியா கூறியிருந்தார். ஹர்திக் மற்றும் க்ருனால் பாண்டியாவின் தந்தை உயிரிழந்ததையடுத்து அவர்களின் ரசிகர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.