இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி: இந்திய அணி நாளை அறிவிப்பு + "||" + Ind vs Eng: Indian selectors to pick squad for first 2 Tests on Tuesday, eye on injuries
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி: இந்திய அணி நாளை அறிவிப்பு
இந்தியா- இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.
மும்பை,
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அந்த பயணத்தை முடித்து இங்கிலாந்து அணியுடன் மோதுகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளும் சென்னையில் நடைபெறுகிறது. இதில் முதல் டெஸ்ட் அடுத்த மாதம் 5-ந்தேதி நடக்கிறது.
சென்னையில் நடைபெற இருக்கும் முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணி நாளை அறிவிக்கப்படுகிறது. சேத்தன் சர்மா தேர்வுக்குழுவின் தலைவராக பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் இந்திய அணி தேர்வில், இந்திய அணியில் முகமது ஷமி, உமேஷ் யாதவ், ஜடேஜா, கேஎல் ராகுல், பும்ரா, அஸ்வின், விஹாரி ஆகியோர் காயம் அடைந்துள்ளனர். இதனால் இந்த தொடருக்கான அணியில் இடம்பெறுவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்தியா- இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.