கிரிக்கெட்

இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து அணி எளிதில் வெற்றி + "||" + England easily won the first Test against Sri Lanka

இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து அணி எளிதில் வெற்றி

இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து அணி எளிதில் வெற்றி
இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து அணி எளிதில் வெற்றி பெற்றது.
காலே, 

இலங்கை-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலேயில் கடந்த 14-ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இலங்கை 135 ரன்களும், இங்கிலாந்து 421 ரன்களும் எடுத்தன. 286 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இலங்கை 359 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 74 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. எளிய இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 4-வது நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 38 ரன்கள் எடுத்திருந்தது.

இந்த நிலையில் கடைசி நாளான நேற்று தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து மேற்கொண்டு 9.2 ஓவர்களில் இலக்கை எட்டிப்பிடித்தது. அந்த அணி 24.2 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 76 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜானி பேர்ஸ்டோ 35 ரன்களுடனும், டேன் லாரன்ஸ் 21 ரன்களுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர். இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடர் என்பதால் இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து 60 புள்ளிகளை தட்டிச்சென்றது.

இலங்கை மண்ணில் இங்கிலாந்து அணி தொடர்ச்சியாக பெற்ற 5-வது வெற்றி இதுவாகும். அத்துடன் ஜோ ரூட் தலைமையில் இங்கிலாந்து பெற்ற 24-வது வெற்றியாகவும் பதிவானது. இதன் மூலம் இங்கிலாந்து கேப்டன்களில் அதிக வெற்றிகளை தேடித்தந்த கேப்டன்களின் வரிசையில் 2-வது இடத்தில் உள்ள ஆன்ட்ரூ ஸ்டிராஸ், அலஸ்டயர் குக் ஆகியோரின் சாதனையை சமன் செய்தார். இந்த வகையில் 26 வெற்றிகளுடன் மைக்கேல் வாகன் முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தோல்விக்கு பிறகு இலங்கை பொறுப்பு கேப்டன் தினேஷ் சன்டிமால் கூறுகையில், ‘முதல் இன்னிங்சில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டிலும் நாங்கள் முழுமையாக வீழ்த்தப்பட்டு விட்டோம். எப்போதுமே முதல் இன்னிங்சில் பெரிய ஸ்கோர் குவிக்க வேண்டியது முக்கியம். இன்னும் 70-80 ரன்கள் கூடுதலாக எடுத்திருந்தால் முடிவு மாறியிருக்கலாம்’ என்றார்.

இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இதே மைதானத்தில் வருகிற 22-ந்தேதி தொடங்குகிறது.

Related Tags :

தொடர்புடைய செய்திகள்

1. இலங்கையில் பைசர் தடுப்பூசியை அவசரகால அடிப்படையில் பயன்படுத்த அனுமதி
கொரோனா பரவலைத் தடுக்க அவசரகால அடிப்படையில் பைசர் தடுப்பு மருந்தை பயன்படுத்த இலங்கை அரசு அனுமதி வழங்கியுள்ளது.
2. இலங்கைக்கு எதிரான டெஸ்டில் வங்காளதேச அணி 541 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’
இலங்கை-வங்காளதேச அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பல்லகெலேயில் நடந்து வருகிறது.
3. இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: வங்காளதேச அணி 474 ரன்கள் குவிப்பு
இலங்கை-வங்காளதேச அணிகள் இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பல்லகெலேயில் நடந்து வருகிறது.
4. இலங்கையில் தடுப்பூசி போட்டவர்களில் 6 பேருக்கு ரத்த உறைவு - 3 பேர் உயிரிழப்பு
இலங்கையில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் 6 பேருக்கு ரத்த உறைவு பிரச்சினை ஏற்பட்டதாகவும், அவர்களில் 3 பேர் உயிரிழந்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5. அதிகரிக்கும் கொரோனா: வெளிநாட்டு பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க இலங்கை திட்டம்
இலங்கையில் கடந்த 24 மணி நேரத்தில் 168- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.