கிரிக்கெட்

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்திய அணி முதலிடத்திற்கு முன்னேற்றம் + "||" + Ind vs Aus: India on top of ICC Test ranking after beating Australia in Gabba

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்திய அணி முதலிடத்திற்கு முன்னேற்றம்

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்திய அணி முதலிடத்திற்கு முன்னேற்றம்
பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பதிவு செய்த இந்திய அணி, தொடரையும் 2-1 என்ற கணக்கில் வென்று அசத்தியது.
துபாய்,

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. அதிலும் காபா மைதானத்தில் இந்தியா பெற்ற வெற்றி, கிரிக்கெட் வரலாற்றில் மிகமுக்கியமான வெற்றியாகும். இந்த வெற்றியின் மூலம் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் முதலிடத்திற்கு முன்னேறியது இந்திய அணி

அதே நேரத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அனுபவ வீரர்கள் காயமடைந்த போதிலும் இந்தியா பெற்றுள்ள இந்த வெற்றி வளர்ந்து வரும் வீரர்களால் சாத்தியமாகி உள்ளது. இந்திய அணி  430 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. 420- புள்ளிகளுடன் நியூசிலாந்து அணி 2- ஆம் இடத்திலும் 332- புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா மூன்றாம் இடத்திலும் உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட்: இந்திய அணியிலிருந்து பும்ரா விடுவிக்கப்படுவதாக பிசிசிஐ அறிவிப்பு
இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இருந்து, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளார் பும்ரா விடுவிக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது
2. இங்கிலாந்துக்கு எதிரான பகல்-இரவு டெஸ்டில் சாதிக்குமா இந்தியா?
பகல்-இரவு டெஸ்டில் இதுவரை பெரிய அளவில் ஜொலிக்காத இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக மிரட்டுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
3. பிரிஸ்பேன் டெஸ்டில் இந்திய அணி வரலாற்று வெற்றி - தொடரையும் கைப்பற்றி அசத்தல்
பிரிஸ்பேனில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் இந்திய அணி 328 ரன்கள் இகலக்கை விரட்டிப்பிடித்து புதிய வரலாறு படைத்தது.
4. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி; இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இடம்பிடித்துள்ளனர்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இடம்பிடித்துள்ளனர்
5. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட்: இந்திய அணி ஆறுதல் வெற்றியாவது பெறுமா? - கடைசி ஒரு நாள் போட்டி இன்று நடக்கிறது
இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது. தொடரை இழந்து விட்ட இந்திய அணி ஆறுதல் வெற்றியாவது பெறுமா? என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.