இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்: முதல் 2 போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிப்பு, நடராஜனுக்கு இடம் இல்லை + "||" + Ind vs Eng: Kohli, Hardik and Ishant return as Natarajan misses out for first 2 Tests
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்: முதல் 2 போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிப்பு, நடராஜனுக்கு இடம் இல்லை
இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை,
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் 2 டெஸ்ட் போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் பங்கேற்கும் இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் விவரம் வருமாறு:- “ விராட் கோலி (கேப்டன்), ரகானே, ரோகித் சர்மா, சுப்மான் கில், மயங்க் அகர்வால், புஜாரா, சஹா, ஹர்திக் பாண்ட்யா, கே எல் ராகுல் ( காயத்தில் இருந்து மீள்வதை பொருத்து) ரிஷாப் பாண்ட், பும்ரா, இஷாந்த் சர்மா,ஷர்துல் தாகூர், அஷ்வின், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல்
இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி சென்னையில் தொடங்குகிறது. 2-வது டெஸ்ட் போட்டி 13 ஆம் தேதி சேப்பாக்கம் மைதானத்திலேயே நடைபெறுகிறது. 3-வது மற்றும் 4-வது டெஸட் போட்டி அகமதாபத்தில் முறையே பிப்ரவரி 28, மார்ச் 8 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
டெஸ்ட் தொடருக்குப் பிறகு 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி விளையாடுகிறது.
டெஸ்ட் போட்டியை நேரில் பார்க்க 50 சதவீதம் ரசிகர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒரு நாள் ஆட்டங்கள் வெறிச்சோடிய மைதானத்தில் அரங்கேற இருப்பது குறிப்பிடத்தக்கது.