கிரிக்கெட்

வெற்றியை அதிகமாகக் கொண்டாட வேண்டாம்: இந்திய கிரிக்கெட் அணிக்கு பீட்டர்சன் எச்சரிக்கை + "||" + Kevin Pietersen Issues Friendly Warning To India Ahead Of England Series

வெற்றியை அதிகமாகக் கொண்டாட வேண்டாம்: இந்திய கிரிக்கெட் அணிக்கு பீட்டர்சன் எச்சரிக்கை

வெற்றியை அதிகமாகக் கொண்டாட வேண்டாம்: இந்திய கிரிக்கெட் அணிக்கு பீட்டர்சன் எச்சரிக்கை
வெற்றியை அதிகமாக கொண்டாட வேண்டாம், உண்மையான அணி சில நாள்களில் இந்தியாவுக்கு வர உள்ளது என பீட்டர்சன் வேடிக்கையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
லண்டன்,

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்று அசத்தியது. இந்திய அணியின் வெற்றியை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், வெற்றியை அதிகமாக கொண்டாட வேண்டாம் என இந்திய கிரிக்கெட் அணிக்கு ஜாலியாக பீட்டர்சன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  கெவின் பீட்டர்சன் தனது டுவிட்டரில் கூறியதாவது: -

பல தடைகளைத் தாண்டி கிடைத்த இந்த வெற்றியை கொண்டாடுங்கள் இந்தியா. எனினும் உண்மையான அணி இன்னும் சில நாள்களில் இந்தியாவுக்கு வரவுள்ளது. அவர்களை நீங்கள் தோற்கடித்தாக வேண்டும். எச்சரிக்கையுடன் இருங்கள். அடுத்த இரு வாரங்களுக்கு அதிகமாகக் கொண்டாடுவதைத் தவிர்த்து விடுங்கள்” என பதிவிட்டுள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு  4 டெஸ்டுகள், 5 டி20, 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வரும் 5 ஆம் தேதி தொடங்க உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,11,170 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 4,077 பேர் பலி
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,11,170 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. இந்தியாவில் புதிதாக 3,26,098 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 3,890 பேர் பலி
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,26,098 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. இந்தியாவில் பயன்பாட்டுக்கு வரும் 8 தடுப்பூசிகள்: முழு விவரம்
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில், பயன்பாட்டுக்கு வரும் 8 தடுப்பூசிகள் தொடர்பான முழு விவரங்கள் வெளியாகி உள்ளன.
4. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 3.43 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 43 ஆயிரத்து 144 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
5. இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ரமேஷ் பவார் நியமனம்
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த தமிழகத்தை சேர்ந்த டபிள்யூ. வி.ராமனின் பதவி காலம் கடந்த மார்ச் மாதம் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் 20 ஓவர் தொடருடன் முடிவுக்கு வந்தது.

அதிகம் வாசிக்கப்பட்டவை