கிரிக்கெட்

உரிமையாளர்களை கொண்ட கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக மலிங்கா அறிவிப்பு + "||" + Malinga announces retirement from Franchise cricket

உரிமையாளர்களை கொண்ட கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக மலிங்கா அறிவிப்பு

உரிமையாளர்களை கொண்ட கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக மலிங்கா அறிவிப்பு
வேகப்பந்துவீச்சாளர் லசித் மலிங்கா, உரிமையாளர்களை கொண்ட கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
மும்பை,

இலங்கை அணியின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் லசித் மலிங்கா. உலகளவில் சிறந்த யார்க்கர் பந்து வீச்சாளர்களில் ஒருவராக அறியப்படும் இவர், ஒரு ஓவரின் அனைத்தை பந்துகளையும் துல்லியமான யார்க்கராக வீசும் வல்லமை படைத்தவர்.

ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். இந்த நிலையில் இன்று லசித் மலிங்கா மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து விடுவிக்கப்படுகிறார் என அந்த அணியின் நிர்வாகம் தெரிவித்தது. இந்த நிலையில், மலிங்கா உரிமையாளர்களை கொண்ட கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளதாக மும்பை இந்தியன்ஸ் அணி தெரிவித்துள்ளது. 

இந்த தகவலை மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர் ஆகாஷ் அம்பானி உறுதி செய்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “லசித் மலிங்கா 12 ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணியின் பலமாக இருக்கிறார். இன்னும் ஐந்து வருடங்களுக்கு எங்கள் அணியின் ஒரு பகுதியாக அவர் இருப்பதை நாக்கள் விரும்பினாலும், அவரது முடிவை நாங்கள் மதிக்கிறோம்” என்று கூறியுள்ளார்.

லசித் மலிங்கா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 12 சீசன்களில் விளையாடியுள்ளார். இதுவரை 122 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 170 விக்கெட்டுகளை கைப்பற்றி, அதிக விக்கெட் வீழ்த்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.