‘உண்மையான அணி இனிதான் வருகிறது’ - இந்திய அணிக்கு பீட்டர்சன் எச்சரிக்கை


‘உண்மையான அணி இனிதான் வருகிறது’ - இந்திய அணிக்கு பீட்டர்சன் எச்சரிக்கை
x
தினத்தந்தி 20 Jan 2021 11:00 PM GMT (Updated: 20 Jan 2021 11:00 PM GMT)

சவால்மிக்க உண்மையான அணி அடுத்த வாரத்தில் இந்தியா வருகை தர உள்ளதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.

மும்பை,

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘ஆஸ்திரேலிய மண்ணில் பல தடைகளை தாண்டி டெஸ்ட் தொடரை வென்றதால் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் இந்த வரலாற்று வெற்றியை கொண்டாடி வருகிறார்கள். ஆனால் சவால்மிக்க உண்மையான அணி அடுத்த வாரத்தில் இந்தியா வருகை தர உள்ளது. உங்களது சொந்த மண்ணில் அவர்களை தோற்கடித்தாக வேண்டும். எனவே எச்சரிக்கையாக இருங்கள். அடுத்த இரு வாரங்களில் அதிகமாக கொண்டாடுவதை தவிர்த்து விடுங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலாவது டெஸ்ட் வருகிற 5-ந்தேதி சென்னையில் தொடங்குகிறது.

Next Story