கிரிக்கெட்

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய வீரர் ரிஷாப் பண்ட் முன்னேற்றம் - விராட் கோலிக்கு பின்னடைவு + "||" + Indian batsman Rishabh Pant advances in Test cricket rankings - setback for Virat Kohli

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய வீரர் ரிஷாப் பண்ட் முன்னேற்றம் - விராட் கோலிக்கு பின்னடைவு

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய வீரர் ரிஷாப் பண்ட் முன்னேற்றம் - விராட் கோலிக்கு பின்னடைவு
டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் 13-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
துபாய், 

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.), டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் மாற்றமின்றி முதலிடத்திலும்(919 புள்ளி), ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் சுமித் 2-வது இடத்திலும் (891 புள்ளி) தொடருகிறார்கள்.

இந்தியாவுக்கு எதிராக பிரிஸ்பேனில் நடந்த கடைசி டெஸ்டில் சதம் அடித்த ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுஸ்சேன் 12 புள்ளி கூடுதலாக பெற்று மொத்தம் 878 புள்ளிகளுடன் 4-ல் இருந்து 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். 3-வது இடம் வகித்த இந்திய கேப்டன் விராட் கோலி கடைசி டெஸ்டையும் தவற விட்டதால் மேலும் 8 புள்ளிகளை இழந்து 862 புள்ளிகளுடன் 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

பிரிஸ்பேன் டெஸ்டில் 89 ரன் விளாசி 328 ரன் இலக்கை எட்டுவதற்கு வித்திட்ட இந்திய இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் கிடுகிடுவென 13 இடங்கள் எகிறி 13-வது இடத்துக்கு (691 புள்ளி) வந்துள்ளார். தற்போது விக்கெட் கீப்பர்களில் சிறந்த தரநிலையை கொண்டிருப்பது ரிஷாப் பண்ட் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதே டெஸ்டில் 91 ரன்கள் குவித்த மற்றொரு இந்திய ‘இளம்புயல்’ சுப்மான் கில் 21 இடங்கள் உயர்ந்து 47-வது இடத்தை பிடித்துள்ளார்.

இதே போல் இந்திய அனுபவ வீரர்கள் புஜாரா 7-வது இடத்திலும் (ஒரு இடம் ஏற்றம்), அஜிங்யா ரஹானே 9-வது இடத்திலும் (2 இடம் சரிவு) ரோகித் சர்மா 18-வது இடத்திலும் (ஒரு இடம் குறைவு) உள்ளனர். காலேயில் நடந்த இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்த இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 6 இடங்கள் அதிகரித்து 5-வது இடத்தை (783 புள்ளி) பெற்றுள்ளார்.

பந்து வீச்சாளர்களின் தரவரிசையில், இந்திய தொடரில் தொடர்நாயகன் விருதை தட்டிச்சென்ற ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் ‘நம்பர் ஒன்’ இடத்தில் நீடிக்கிறார். இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் 2-வது இடத்திலும், நியூசிலாந்தின் நீல் வாக்னெர் 3-வது இடத்திலும் உள்ளனர். பிரிஸ்பேன் டெஸ்டில் மொத்தம் 6 விக்கெட்டுகள் வீழ்த்திய ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் மேலும் ஒரு இடம் ஏற்றம் கண்டு 4-வது இடத்தை வசப்படுத்தினார். கடைசி டெஸ்டில் ஆடாவிட்டாலும் இந்தியாவின் அஸ்வின், ஜஸ்பிரித் பும்ரா தலா ஒரு இடம் உயர்ந்து முறையே 8, 9-வது இடங்களை வகிக்கிறார்கள்.

பிரிஸ்பேன் டெஸ்டில் சொதப்பிய ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் 8-ல் இருந்து 11-வது இடத்துக்கு பின்தங்கியுள்ளார். இதே போட்டியில் 2-வது இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை அள்ளிய இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் 32 இடங்கள் முன்னேறி 45-வது இடத்தை பிடித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் ரோகித், அஸ்வின் முன்னேற்றம் - ஜோ ரூட், பென் ஸ்டோக்சுக்கு பின்னடைவு
டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் ரோகித், அஸ்வின் முன்னேற்றமடைந்துள்ளனர். இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் மற்றும் பென் ஸ்டோக்சுக்கு பின்னடைவு.
2. டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் நியூசிலாந்து அணி முதல்முறையாக முதலிடத்தை பிடித்தது
டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் நியூசிலாந்து அணி முதல்முறையாக முதலிடத்தை பிடித்துள்ளது.
3. டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை: ‘நம்பர் ஒன்’ வீரர் சுமித்தை நெருங்கினார், கோலி
அடிலெய்டில் நடந்த டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை பந்தாடியது.