கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்: இங்கிலாந்து அணியில் ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் + "||" + Test against India: Stokes, Archer in England squad

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்: இங்கிலாந்து அணியில் ஸ்டோக்ஸ், ஆர்ச்சர்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்: இங்கிலாந்து அணியில் ஸ்டோக்ஸ், ஆர்ச்சர்
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் இடம்பெற்றுள்ளனர்.
லண்டன்,

இந்தியாவுக்கு வருகை தரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு டெஸ்ட் போட்டிகள் சென்னையிலும் (பிப்.5-9, பிப்.13-17), கடைசி இரு டெஸ்ட் போட்டிகள் ஆமதாபாத்திலும் நடக்கிறது. இந்தியாவுக்கு எதிரான முதல் இரு டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி நேற்றுஅறிவிக்கப்பட்டது. இலங்கை தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டிருந்த ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் அணிக்கு திரும்புகிறார்கள். ஜானி பேர்ஸ்டோ, சாம் கர்ரன், மார்க்வுட் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணி வருமாறு:-

ஜோ ரூட் (கேப்டன்), ஜோப்ரா ஆர்ச்சர், மொயீன் அலி, ஜேம்ஸ் ஆண்டர்சன், டாம் பெஸ், ஸ்டூவர்ட் பிராட், ரோரி பர்ன்ஸ், ஜோஸ் பட்லர், ஜாக் கிராவ்லி, பென் போக்ஸ், டான் லாரன்ஸ், ஜாக் லீச், டாம் சிப்லி, பென் ஸ்டோக்ஸ், ஆலி ஸ்டோன், கிறிஸ் வோக்ஸ்.