கிரிக்கெட்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து சென்னை சூப்பர் கிங்சுக்கு மாறினார் உத்தப்பா + "||" + Uthappa transferred from Rajasthan Royals to Chennai Super Kings

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து சென்னை சூப்பர் கிங்சுக்கு மாறினார் உத்தப்பா

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து சென்னை சூப்பர் கிங்சுக்கு மாறினார் உத்தப்பா
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து பரஸ்பர பரிமாற்றம் அடிப்படையில் உத்தப்பாவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாகியுள்ளது.
சென்னை,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ரூ.3 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு கடந்த ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய விக்கெட் கீப்பர் ராபின் உத்தப்பா, பரஸ்பர பரிமாற்றம் அடிப்படையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தாவுகிறார். சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷேன் வாட்சன் ஓய்வு பெற்று விட்டதால் அந்த இடத்திற்கு அனுபவ வீரர் தேவை என்ற நோக்கில் உத்தப்பாவை சென்னை அணி வாங்கியுள்ளது. 

இது அவர் விளையாடப்போகும் 6-வது அணியாகும். 2008-ம் ஆண்டில் இருந்து ஐ.பி.எல்.-ல் விளையாடி வரும் 35 வயதான உத்தப்பா கடந்த ஐ.பி.எல். சீசனில் 12 ஆட்டங்களில் வெறும் 196 ரன்கள் மட்டுமே எடுத்தது குறிப்பிடத்தக்கது.