கிரிக்கெட்

நடராஜன் உள்பட 6 வீரர்களுக்கு கார் பரிசு - ஆனந்த் மஹிந்திரா அறிவிப்பு + "||" + Anand Mahindra announces car prizes for 6 players including Natarajan

நடராஜன் உள்பட 6 வீரர்களுக்கு கார் பரிசு - ஆனந்த் மஹிந்திரா அறிவிப்பு

நடராஜன் உள்பட 6 வீரர்களுக்கு கார் பரிசு - ஆனந்த் மஹிந்திரா அறிவிப்பு
ஆஸ்திரேலிய களத்தில் சாதித்த 6 இளம் வீரர்களுக்கு கார் பரிசாக வழங்கப்படும் என்று மஹிந்திரா குழும சேர்மன் ஆனந்த் மஹிந்திரா அறிவித்துள்ளார்.
மும்பை, 

ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வசப்படுத்தி வரலாறு படைத்ததை ரசிகர்கள் இன்னும் கொண்டாடி வருகிறார்கள். வீரர்களுக்கு பாராட்டும் குவிகிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய களத்தில் சாதித்த 6 இளம் வீரர்களுக்கு கார் பரிசாக வழங்கப்படும் என்று மஹிந்திரா குழும சேர்மன் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா அறிவித்துள்ளார். 

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் அறிமுகமாகி அசத்திய இந்திய வீரர்கள் டி.நடராஜன், முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர், சுப்மான் கில், நவ்தீப் சைனி, ஷர்துல் தாகூர் (தாகூர் ஏற்னவே 2 ஆண்டுக்கு முன் ஒரு டெஸ்டில் விளையாடி இருந்தார்) ஆகியோரை ஊக்கப்படுத்தும் விதமாக எனது சொந்த செலவில் காரை பரிசாக வழங்க இருக்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.