கிரிக்கெட்

2 டெஸ்ட் போட்டி: இந்திய வீரர்கள் 27-ந் தேதி சென்னை வருகை + "||" + Indian players arrive in Chennai on the 27th

2 டெஸ்ட் போட்டி: இந்திய வீரர்கள் 27-ந் தேதி சென்னை வருகை

2 டெஸ்ட் போட்டி: இந்திய வீரர்கள் 27-ந் தேதி சென்னை வருகை
இங்கிலாந்துக்கு எதிரான தொடரை விளையாட உள்ள நிலையில் இந்திய அணி வீரர்கள் 27-ம் தேதி பல்வேறு நகரங்களில் இருந்து தனித்தனியாக சென்னை வந்தடைகிறார்கள்.
லண்டன்,

இந்தியாவுக்கு வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு டெஸ்ட் போட்டிகள் சென்னையிலும் (பிப்.5-9, பிப்.13-17), கடைசி இரு டெஸ்ட் போட்டிகள் ஆமதாபாத்திலும் நடக்கிறது. 

முதல் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்திய வீரர்கள் வருகிற 27-ந் தேதி சென்னை வருகிறார்கள். வீரர்கள் பல்வேறு நகரங்களில் இருந்து தனித்தனியாக சென்னை வந்தடைகிறார்கள்.

அவர்கள் சென்னை வந்தவுடன் கொரோனா தடுப்பு பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்படுவார்கள். ஒரு வாரம் வீரர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். அதன்பிறகு வீரர்கள் பயிற்சியை தொடங்குவார்கள்.

இதேபோல இங்கிலாந்து அணியும் அதே தினத்தில் இலங்கையில் இருந்து சென்னை வருகிறது. இங்கிலாந்து வீரர்களும் கொரோனா பாதுகாப்பு வளையத்துக்குள் வருவார்கள்.

இலங்கை பயணத்தில் ஆடாத ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், வேகப்பந்து வீச்சாளர் ஆர்ச்சர், தொடக்க வீரர் ராய் பர்னஸ் ஆகியோர் இங்கிலாந்தில் இருந்து நேரடியாக சென்னை வருகிறார்கள்.

இந்தியா, இங்கிலாந்து வீரர்கள் ராஜா அண்ணா மலைபுரத்தில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்படுகிறார்கள். போட்டி அமைப்பாளர்களும் அங்கேயே தங்குகிறார்கள்.

சென்னை டெஸ்டில் விளையாடும் இந்திய அணி வீரர்கள் வருமாறு:-

விராட் கோலி (கேப்டன்), ரகானே (துணை கேப்டன்), ரோகித் சர்மா, மயங்க் அகர்வால், சுப்மன்கில், புஜாரா, கே.எல்.ராகுல், ஹர்த்திக் பாண்ட்யா, ரி‌ஷப் பண்ட், விருத்திமான் சகா, அஸ்வின், பும்ரா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், அக்சர் படேல், இஷாந்த் சர்மா, ‌ஷர்துல் தாகூர், வாஷிங்டன் சுந்தர்.