கிரிக்கெட்

20 ஓவர் போட்டிக்கு ரசிகர்களை அனுமதிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் ஆர்வம் + "||" + The Indian Cricket Board is keen to allow fans to the 20-over match

20 ஓவர் போட்டிக்கு ரசிகர்களை அனுமதிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் ஆர்வம்

20 ஓவர் போட்டிக்கு ரசிகர்களை அனுமதிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் ஆர்வம்
இந்தியா-இங்கிலாந்து இடையிலான 20 ஓவர் போட்டிக்கு ரசிகர்களை அனுமதிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆமதாபாத்,

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியா-இங்கிலாந்து இடையே சென்னையில் நடக்க உள்ள முதல் இரு டெஸ்ட் போட்டிகளை பார்க்க ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. ஆனால் ஆமதாபாத்தில் மார்ச் 12-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை நடக்கும் 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரை நேரில் பார்க்க ரசிகர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது. 

இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘திரிலிங்கான இந்தியா-இங்கிலாந்து இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கு ஸ்டேடியத்தில் ரசிகர்களை அனுமதிக்க முயற்சி மேற்கொண்டுள்ளோம். ஆனால் எத்தனை ரசிகர்களுக்கு அனுமதி வழங்குவது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. 50 சதவீதம் அளவுக்கு இருக்கையை நிரப்பினால் நன்றாக இருக்கும். இருப்பினும் ரசிகர்களை அனுமதிப்பது என்பது அரசின் முடிவை பொறுத்து இருக்கிறது. புதிய விதிகள் கடைபிடிக்கப்பட்டாலும்கூட பாதுகாப்புக்கே முன்னுரிமை அளிக்கப்படும்’ என்றார்.