கிரிக்கெட்

14வது ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் சென்னையில் பிப்.18ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு + "||" + Players bid for 14th IPL series It will be held on February 18 in Chennai

14வது ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் சென்னையில் பிப்.18ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு

14வது ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் சென்னையில் பிப்.18ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு
14வது ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் சென்னையில் பிப்.18ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சென்னை,

ஐபிஎல் 14வது சீசன் டி-20 தொடர் வரும் ஏப்ரல் மே மாதங்களில் இந்தியாவில் பிரமாண்டமாக தொடங்க உள்ளது. கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் கொரோனா அச்சம் காரணமாக ஐக்கிய அரபு அமிரகத்தில் நடைபெற்றது. இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறுவது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில்,  14வது ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் சென்னையில் பிப்ரவரி 18ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

2021 ஐபிஎல் தொடருக்காக 8 அணிகளும் சேர்த்து மொத்தம் 57 வீரர்களை விடுவித்த நிலையில் ஐபிஎல் ஏலம் சென்னையில் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஐபிஎல் வரலாற்றில் சென்னையில் முதல் முறையாக அதற்கான ஏலம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.