கிரிக்கெட்

வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் வீரர் பொலார்ட் மறைந்ததாக வதந்தி ;ரசிகர்கள் அதிர்ச்சி + "||" + Kieron Pollard Latest to Fall Victim to Death Rumours Thanks to Viral Fake News Video

வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் வீரர் பொலார்ட் மறைந்ததாக வதந்தி ;ரசிகர்கள் அதிர்ச்சி

வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் வீரர் பொலார்ட் மறைந்ததாக வதந்தி ;ரசிகர்கள் அதிர்ச்சி
வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் வீரர் பொலார்ட் விபத்தில் இறந்து போனதாக வதந்தி வெளியானதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தார்கள்.
அபுதாபி

33 வயது பொலார்ட், வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணிக்காக 113 ஒருநாள், 76  20 ஓவர் போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும் 531  இருபது ஓவர் போட்டிகளில்  விளையாடி மகத்தான இருபது ஓவர்  வீரராகவும் உள்ளார்.

 ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் நீண்ட நாளாக விளையாடி வருவதால் இந்திய ரசிகர்களுக்கும் அறிமுகமாகியுள்ளார்.இந்நிலையில் கார் விபத்தில் பொலார்ட் பலியானதாக வதந்தி ஒன்று சமூகவலைத்தளத்தில் பரவியது.யூடியூபில் இதுதொடர்பாக வீடியோவும் வெளியானது. 

இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். எனினும் இது வதந்தி என்பதை ரசிகர்கள் பிறகு அறிந்துகொண்டார்கள். தவறான செய்தியைச் சமூகவலைத்தளங்களில் பகிர வேண்டாம் என பல ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்தார்கள். 

பொலார்ட் தற்போது அபுதாபி  10 ஓவர் போட்டியில் விளையாடி வருகிறார். டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணிக்குத் தலைமை தாங்கி வருகிறார். இன்று கூட இன்ஸ்டகிராமில் அவர் புகைப்படத்தைப் பதிவு செய்துள்ளார். தொடர்புடைய செய்திகள்

1. ஐபிஎல் வீரர்களுக்கு கொரோனா;அது எப்படி நடந்தது என்று சொல்வது மிகவும் கடினம் -பிசிசிஐ தலைவர் கங்குலி
ஐபிஎல் போட்டியை இந்தியாவில் நடத்த முயன்றது தவறல்ல என்று பிசிசிஐ தலைவர் கங்குலி கூறியுள்ளார்.
2. ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் துப்பாக்கி முனையில் கடத்தி தாக்குதல் ; 4 பேர் கைது
பணத்துக்காக ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் துப்பாக்கி முனையில் கடத்தபட்டார். பின்னர் அவர் விடுவிக்கபட்டார் இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
3. பாகிஸ்தான் அறிமுக வீரர் வீசிய பவுன்ஸரில் ஜிம்பாப்வே பேட்ஸ்மேனின் ஹெல்மெட் இரண்டாக உடைந்தது
பாகிஸ்தான் அறிமுக வீரர் வீசிய அதிவேக பவுன்ஸரில் ஜிம்பாப்வே பேட்ஸ்மேனின் ஹெல்மெட் இரண்டாக உடைந்தது.
4. இந்திய கிரிக்கெட் வாரிய ஒப்பந்த பட்டியலில் தமிழக வீரர் நடராஜன் இடம்பெறாதது ஏன்? மீண்டும் சேர வாய்ப்பு எப்படி..?
இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் நடராஜனுக்கு ஒப்பந்தம் வழங்காதது அவருடைய ரசிகர்களை ஆச்சர்யப்பட வைத்துள்ளது.
5. சூதாட்டம்: ஜிம்பாப்வே அணியின் முன்னாள் கேப்டனுக்கு 8 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடத் தடை
ஜிம்பாப்வே அணியின் முன்னாள் கேப்டனும், வேகப்பந்துவீச்சாளருமான ஹீத் ஸ்ட்ரீக், 8 ஆண்டுகள் எந்தவிதமான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவும், விளையாடவும் தடை விதித்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது.