கிரிக்கெட்

“விராட் கோலியை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்று தெரியவில்லை” - மொயீன் அலி + "||" + "I don't know how we are going to tackle Virat Kohli" - Moeen Ali

“விராட் கோலியை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்று தெரியவில்லை” - மொயீன் அலி

“விராட் கோலியை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்று தெரியவில்லை” - மொயீன் அலி
இந்தியாவுடன் நடக்க உள்ள கிரிக்கெட் தொடரில் விராட் கோலியை எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லை என இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் மொயீன் அலி தெரிவித்துள்ளார்.
சென்னை,

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இருக்கும் ஃபார்மில் எப்படி அவரை ஆட்டமிழக்கச் செய்யப் போகிறோம் எனத் தெரியவில்லை என்று இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் மொயின் அலி வியப்புடன் தெரிவித்தார்.

இங்கிலந்து அணி இந்தியாவில் பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள், டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதன் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்க இருக்கின்றன. முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் பிப்ரவரி 5 ஆம் தேதி தொடங்குகிறது.

தற்போது சென்னை வந்துள்ள இங்கிலாந்து வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்துதலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் மொயீன் அலி காணொலி மூலம் நடைபெற்ற உரையாடலில் பங்கேற்று பேசினார்.

அப்போது அவர் விராட் கோலி இப்போது நல்ல ஃபார்மில் இருப்பதாக தெரிவித்தார். மேலும் குழந்தை பிறந்த மகிழ்ச்சி, ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்றது ஆகிய காரணங்களால் கோலி உற்சாகமாக இருப்பார் என்றும் கோலிக்கு இந்திய ஆடுகளத்தில் எந்த பலவீனமும்  இருப்பதாக தான் நினைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். இதையெல்லாம் நினைக்கும் போது, கோலியை எப்படி சமாளிக்கப் போகிறோம், எவ்வாறு ஆட்டமிழக்கச் செய்யப் போகிறோம் எனத் தெரியவில்லை என்று மொயீன் அலி கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. சுழல் ஆடுகளத்தை மட்டும் விமர்சிப்பது ஏன்? விராட் கோலி கேள்வி
ஆமதாபாத்தில் நடந்த 3-வது டெஸ்ட் போட்டி 2-வது நாளிலேயே முடிந்ததால் வெகுவாக விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக சுழலின் கூடாரமாக இந்த ஆடுகளம் (பிட்ச்) இருந்தது குறித்து இங்கிலாந்து முன்னாள் வீரர்களும், சில ஊடகத்தினரும் குறை கூறினார்கள்.
2. இன்ஸ்டாகிரமில் 100 மில்லியன் ஃபாலோயர்ஸ்; விராட் கோலிக்கு புதிய பெருமை
சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிரமில் 100 மில்லியன் பின் தொடர்பவர்களை கொண்ட ஒரே கிரிக்கெட் பிரபலம் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார்.
3. சென்னை கிரிக்கெட் ரசிகர்கள் புத்திசாலிகள்: விராட் கோலி
சென்னை கிரிக்கெட் ரசிகர்கள் புத்திசாலிகள், கிரிக்கெட் மீதான அவர்களின் புரிதல் அபாரமானது என இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
4. அடுத்து வரும் போட்டிகளில் இங்கிலாந்து அணிக்கு கடும் நெருக்கடியைக் கொடுப்போம்- விராட் கோலி
சென்னையில் நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
5. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு கேரள உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடுக்க கோரும் வழக்கில் இந்திய கேப்டன் விராட் கோலி ஆகியோருக்கு கேரள உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது