கிரிக்கெட்

முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட்: பரோடா அணியை வீழ்த்தி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது தமிழக அணி + "||" + Aparajith, Siddharth star as Tamil Nadu wins SMAT for second time

முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட்: பரோடா அணியை வீழ்த்தி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது தமிழக அணி

முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட்: பரோடா அணியை வீழ்த்தி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது தமிழக அணி
சையத் முஷ்டக் அலி கோப்பைக்கான இறுதி போட்டியில் பரோடா அணியை வீழ்த்தி இரண்டாவது முறையாக தமிழக அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
அகமதாபாத்,

12-வது சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆமதாபாத்தில் உள்ள சர்தார் பட்டேல் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. 38 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் நாக்-அவுட் சுற்று முடிவில் தமிழ்நாடு அணியும், குஜராத் மாநிலத்திற்குட்பட்ட பரோடா அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

இந்த நிலையில் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழக அணி, தேவ்தார் தலைமையிலான பரோடாவை எதிர்த்து மல்லுகட்டியது. 

அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற தமிழக அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடர்ந்து பரோடா அணி முதலில் பேட்டிங் செய்தது. இருபது ஓவர் முடிவில் 120 ரன்களை குவித்தது பரோடா அணி. அந்த அணிக்காக விஷ்ணு சொலங்கி 49 ரன்களை எடுத்திருந்தார்.

120 பந்துகளில் 121 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சுலப இலக்கை நோக்கி தமிழக அணி பேட்டிங் செய்தது. 18 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 123 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது தமிழக அணி. ஹரி நிஷாந்த், பாபா அபராஜித், தினேஷ் கார்த்திக் சிறப்பாக விளையாடினர். இருப்பினும் 7 பந்துகளில் 18 ரன்களை குவித்து தமிழகத்தை சாம்பியனாக்கினார் ஷாருக்கான். பவுலிங்கில் தமிழக அணிக்காக மணிமாறன் சித்தார்த் மாஸ் காட்டினார். ஆட்ட நாயகன் விருதை வென்றிருந்தார் மணிமாறன் சித்தார்த்.

கடந்த சீசனில் தமிழக அணி இறுதி போட்டியில் தோல்வியை தழுவி இருந்தது. அதற்கான மருந்தாக இந்த வெற்றி தமிழக அணிக்கு அமைந்துள்ளது. இந்த தொடரில் மொத்தமாக 8 வெற்றிகளை பதிவு செய்துள்ளது தமிழக அணி.


தொடர்புடைய செய்திகள்

1. சையத் முஷ்டாக் அலி கிரிக்கெட்: பரோடாவை வீழ்த்தி தமிழக அணி ‘சாம்பியன்’
சையத் முஷ்டாக் அலி 20 ஓவர் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் தமிழக அணி, பரோடாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
2. முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட்: தமிழக அணி மகுடம் சூடுமா? இறுதி ஆட்டத்தில் பரோடாவுடன் இன்று மோதல்
முஷ்டாக் அலி கோப்பைக்கான இறுதி ஆட்டத்தில் தமிழக அணி இன்று (ஞாயிற்றுக்கிழமை) பரோடாவுடன் பலப்பரீட்சையில் இறங்குகிறது.
3. முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட்: அரைஇறுதியில் தமிழ்நாடு-ராஜஸ்தான் இன்று மோதல்
முஷ்டாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் அரைஇறுதி ஆட்டங்களில் தமிழ்நாடு-ராஜஸ்தான், பஞ்சாப்-பரோடா அணிகள் மோதுகின்றன.
4. முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட்: தமிழக அணி அரைஇறுதிக்கு முன்னேற்றம்
முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட்டில் இமாச்சலபிரதேசத்தை வீழ்த்தி தமிழக அணி அரைஇறுதிக்கு முன்னேறியது.
5. முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட்: வெற்றியுடன் தொடங்கியது தமிழகம்
முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழகம் வெற்றியுடன் தொடங்கியது.