3 பரிசோதனைகள் முடிவில் இந்தியா, இங்கிலாந்து அணியினர் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை


3 பரிசோதனைகள் முடிவில் இந்தியா, இங்கிலாந்து அணியினர் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை
x
தினத்தந்தி 2 Feb 2021 12:38 AM GMT (Updated: 2 Feb 2021 12:38 AM GMT)

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னையில் வருகிற 5-ந் தேதி தொடங்குகிறது.

சென்னை, 

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னையில் வருகிற 5-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கான இரண்டு அணி வீரர்களும் கடந்த வாரம் சென்னை வந்து 6 நாட்கள் தனிமைப்படுத்துதலை கடைப்பிடித்தனர். அப்போது இரு அணியின் வீரர்களுக்கும் 3 முறை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. கடைசியாக நேற்று முன்தினம் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனை உள்பட அனைத்து சோதனைகளிலும் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்பதை குறிக்கும் ‘நெகட்டிவ்’ முடிவு வந்துள்ளது. தனிமைப்படுத்துதல் காலம் முடிந்ததுடன், மூன்று கொரோனா சோதனை முடிவும் வந்து விட்டதை அடுத்து இந்திய அணி வீரர்கள் நேற்று மாலை சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் 2 மணி நேரம் பயிற்சியில் ஈடுபட்டனர். இந்திய அணியினர் இன்று காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை வலைப்பயிற்சியில் ஈடுபடுகின்றனர். இதனை அடுத்து இங்கிலாந்து அணியினர் பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை வலைப்பயிற்சி மேற்கொள்ள இருக்கின்றனர்.

Next Story