இலங்கை கிரிக்கெட் வீரர் திரிமன்னே கொரோனாவால் பாதிப்பு


இலங்கை கிரிக்கெட் வீரர் திரிமன்னே கொரோனாவால் பாதிப்பு
x
தினத்தந்தி 3 Feb 2021 11:48 PM GMT (Updated: 3 Feb 2021 11:48 PM GMT)

இலங்கை கிரிக்கெட் வீரர் திரிமன்னே கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது பரிசோதனை முடிவில் தெரியவந்தது.

கொழும்பு, 

இலங்கை கிரிக்கெட் அணி வருகிற 20-ந் தேதி முதல் வெஸ்ட்இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர், 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாட திட்டமிட்டுள்ளது. இந்த தொடருக்கான 36 பேர் கொண்ட இலங்கை உத்தேச அணியினர் கொழும்பில் கடந்த 28-ந் தேதி முதல் 3 பிரிவாக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த பயிற்சி முகாமில் பங்கேற்றுள்ள அனைவருக்கும் நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. 

இதில் அணியின் தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் மற்றும் பேட்ஸ்மேன் லாஹிரு திரிமன்னே ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது பரிசோதனை முடிவில் தெரியவந்தது. இதையடுத்து இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால் இலங்கை அணியின் வெஸ்ட் இண்டீஸ் தொடர் திட்டமிட்டபடி நடைபெறுமா? என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.

Next Story