கிரிக்கெட்

இங்கிலாந்து அணி ரன் குவிப்பு: கேப்டன் ஜோ ரூட் இரட்டைச் சதம் விளாசல் + "||" + England team run accumulation: Captain Joe Root double century

இங்கிலாந்து அணி ரன் குவிப்பு: கேப்டன் ஜோ ரூட் இரட்டைச் சதம் விளாசல்

இங்கிலாந்து அணி ரன் குவிப்பு: கேப்டன் ஜோ ரூட் இரட்டைச் சதம் விளாசல்
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் இரட்டைச் சதம் விளாசினார்.
சென்னை, 

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதன் முதலாவது டெஸ்ட் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது.

பின்னர் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில 89.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 263 ரன்கள் சேர்த்தது. கேப்டன் ஜோ ரூட் 128 ரன்களுடன் (197 பந்து, 14 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தார். நேற்றைய ஆட்டத்தில் இந்திய வீரர்களின் பந்துவீச்சு மட்டுமின்றி பீல்டிங்கும் ஏமாற்றம் அளித்தது. 

இந்நிலையில் இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் ஜோ ரூட்டுடன், பென் ஸ்டோக்ஸ் ஜோடி சேர்ந்தார். சேப்பாக்கம் ஆடுகளம் இன்றும் பேட்டிங்குக்குச் சாதகமாக இருந்ததால் இங்கிலாந்து அணியினர் ரன்களை வேகமாக குவித்தனர். ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் கூட்டணி அதிரடியாக விளையாடியது. இதில் ஸ்டோக்ஸ் 74 பந்துகளில் 50 ரன்கள் அடித்தார். கேப்டன் ஜோ ரூட்டும் தன் பங்குக்கு 150 ரன்களை கடந்தார். பின்னர் 2-ம் நாள் மதிய உணவு இடைவேளையின்போது இங்கிலாந்து அணி 119 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 355 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 156 ரன்கள், பென் ஸ்டோக்ஸ் 63 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.

உணவு இடைவேளைக்குப் பிறகும் விரைவாக ரன்கள் எடுத்த ஸ்டோக்ஸ், நதீம் பந்துவீச்சில் புஜாராவிடம் கேட்ச் கொடுத்து 82 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு வழக்கம்போல தனது ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோ ரூட், 195 ரன்களில் இருந்தபோது அஸ்வின் பந்தில் சிக்ஸர் அடித்து இரட்டைச் சதம் எடுத்தார். 341 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 19 பவுண்டரிகளுடன் இரட்டைச் சதம் விளாசினார். இது ஜோ ரூட்டின் 5-வது டெஸ்ட் இரட்டைச் சதமாகும். கேப்டனாக 3-வது இரட்டைச் சதம். 100-வது டெஸ்டில் இரட்டைச் சதம் எடுத்த முதல் வீரர் என்கிற பெருமையை அவர் பெற்றார். 

இங்கிலாந்து அணி தற்போது 151 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 469 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. கேப்டன் ஜோ ரூட் 214 ரன்களும், போப் 33 ரன்கள் எடுத்து விளையாடி வருகின்றனர். இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக பும்ரா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட்: 2-ம் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் சேர்ப்பு
இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் 2-ம் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் சேர்த்துள்ளது.
2. முதல் டெஸ்ட்: ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 39 ரன்கள் சேர்ப்பு
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இன்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 39 ரன்கள் எடுத்தது.
3. இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்: அஸ்வின் அபாரம்; இந்திய அணிக்கு 420 ரன்கள் வெற்றி இலக்கு
இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அஸ்வினின் சுழலில் சிக்கிய இங்கிலாந்து அணி, 2-வது இன்னிங்ஸில் 178 ரன்களுக்கு சுருண்டது.
4. இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்டில் இங்கிலாந்து அணி அபார வெற்றி; தொடரையும் கைப்பற்றியது
இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் அபார வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி தொடரையும் கைப்பற்றியது.