கிரிக்கெட்

பிக்பாஷ் லீக் 20 ஓவர் கிரிக்கெட்: சிட்னி சிக்சர்ஸ் மீண்டும் ‘சாம்பியன்’ + "||" + Big Bash League 20 Over Cricket: Sydney Sixers 'Champion' Again

பிக்பாஷ் லீக் 20 ஓவர் கிரிக்கெட்: சிட்னி சிக்சர்ஸ் மீண்டும் ‘சாம்பியன்’

பிக்பாஷ் லீக் 20 ஓவர் கிரிக்கெட்: சிட்னி சிக்சர்ஸ் மீண்டும் ‘சாம்பியன்’
பிக்பாஷ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சிட்னி சிக்சர்ஸ் மீண்டும் சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது.
சிட்னி,

பிக்பாஷ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்தது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டி தொடரில் சிட்னியில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சிட்னி சிக்சர்ஸ், முன்னாள் சாம்பியனான பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியை சந்தித்தது. ‘டாஸ்’ ஜெயித்த பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. 

இதன்படி முதலில் பேட் செய்த சிட்னி சிக்சர்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 188 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் ஜேம்ஸ் வின்ஸ் 60 பந்துகளில் 10 பவுண்டரி, 3 சிக்சருடன் 95 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். பின்னர் 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 161 ரன்களே எடுத்தது. 

இதனால் சிட்னி சிக்சர்ஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மீண்டும் சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது. சிட்னி சிக்சர்ஸ் அணி வீரர்கள் ஜேம்ஸ் வின்ஸ் ஆட்டநாயகன் விருதையும், ஜோஷ் பிலிப் தொடர்நாயகன் விருதையும் கைப்பற்றினார்கள்.