கிரிக்கெட்

ரிஷப் பண்ட் தனது இயல்பான ஆட்டத்தை மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை: புஜாரா + "||" + India vs England: Pant doesn't need to change his game but he can be sensible in putting team first, says Pujara

ரிஷப் பண்ட் தனது இயல்பான ஆட்டத்தை மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை: புஜாரா

ரிஷப் பண்ட்  தனது இயல்பான ஆட்டத்தை மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை: புஜாரா
ரிஷப் பண்ட் தனது இயல்பான ஆட்டத்தை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று புஜாரா தெரிவித்துள்ளார்.
சென்னை,

ரிஷப் பண்ட் தனது இயல்பான ஆட்டத்தை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று புஜாரா தெரிவித்துள்ளார். இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் புஜாரா கூறியதாவது: 

"அதிரடி ஆட்டம் ரிஷப் பண்டின் இயல்பான ஆட்டம். அதனால், அவரை நிறைய கட்டுப்படுத்த முடியாது. அவரால், பெரிதளவில் தடுப்பாட்டத்தை வெளிப்படுத்த முடியாது. ஏனென்றால், அவர் விரைவில் ஆட்டமிழந்து விடுவார். ஆனால், சில தருணங்களில் ஷாட்களை சரியாக தேர்வு செய்ய வேண்டும். 

எந்த ஷாட்களை விளையாட வேண்டும், எந்த ஷாட்களை விளையாடக் கூடாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ரிஷப் பண்ட்   எப்போது நீண்ட நேரம் பேட் செய்தாலும் பெரிய ரன்களை அடித்துவிட்டே ஆட்டமிழக்கிறார். எனவே, அவர் அதை நிச்சயம் உணருவார்” என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. 7 ஆண்டுக்கு பிறகு ஐ.பி.எல். போட்டிக்கு திரும்பும் புஜாரா
7 ஆண்டுக்கு பிறகு இந்திய வீரர் புஜாரா ஐ.பி.எல். போட்டிக்கு திரும்புகிறார்.
2. என் வாழ்வில் மிகப்பெரிய தருணம்: ரிஷப் பண்ட் நெகிழ்ச்சி
பிரிஸ்பேனில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இந்த வரலாற்று வெற்றி என் வாழ்வில் மிகப்பெரிய தருணம் என்று ரிஷப் பண்ட் பெருமையுடன் தெரிவித்துள்ளார்.