கிரிக்கெட்

ஐசிசியின் ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கு ரிஷப் பண்ட் தேர்வு + "||" + Rishabh Pant voted inaugural ICC Player of the Month

ஐசிசியின் ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கு ரிஷப் பண்ட் தேர்வு

ஐசிசியின் ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கு ரிஷப் பண்ட் தேர்வு
ஐசிசியின் ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கு ரிஷப் பண்ட் தேர்வாகி உள்ளார்.
துபாய், 

ஐசிசி மாதந்தோறும் சிறந்த கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்து கவுரவிக்க முடிவு செய்திருந்தநிலையில், ஜனவரி மாதத்திற்கான விருதுக்கு இந்தியாவின் ரிஷப் பண்ட், இங்கிலாந்தின் ஜோ ரூட், அயர்லாந்து பேட்ஸ்மேன் பால் ஸ்டிர்லிங் ஆகியோர் பெயரை ஐசிசி பரிந்துரை செய்திருந்தது.

இந்நிலையில் ஐசிசி அறிமுகம் செய்துள்ள மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை இந்திய அணியின் ரிஷப் பண்ட் முதல் வீரராக வென்றுள்ளார். மேலும் சிறந்த வீராங்கனை விருதுக்கு தென் ஆப்பிரிக்காவின் ஷப்னீம் இஸ்மாயில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன்படி முதல் விருதை ரிஷப் பண்ட், ஷப்னீம் இஸ்மாயில் ஆகியோர் தட்டிச்சென்றனர்.

முன்னதாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்ல ரிஷப் பண்ட் முக்கிய காரணமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இவரின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா பிரிஸ்பேனில் வரலாற்று வெற்றியை ருசித்தது. இதனால் ரிஷப் பண்ட் பெயரை ஐசிசி பரிந்துரை செய்தது. 

தொடர்புடைய செய்திகள்

1. ஐசிசியின் டி20 தரவரிசை பட்டியல்: இந்திய அணி 2- ஆம் இடத்திற்கு முன்னேற்றம்
ஐசிசியின் 20 ஓவர்கள் கிரிக்கெட் அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்தியா 2- ஆம் இடம் பெற்றுள்ளது.
2. 3-வது டெஸ்ட்: கவனக்குறைவாக பந்து மீது எச்சில் தேய்த்த பென்ஸ்டோக்ஸ்!
டெஸ்ட் கிரிக்கெட்டில் பவுலர்கள் பந்தை எச்சிலால் நன்கு தேய்த்து பளபளப்பாக்குவது வழக்கம். அவ்வாறு செய்யும் போது பந்து தொடர்ந்து ஸ்விங் அல்லது ரிவர்ஸ் ஸ்விங் ஆக வாய்ப்பு உண்டு.
3. தோனிக்கு ஐசிசியின் ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் விருது
ஐசிசியின் ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் விருதை தோனிக்கு வழங்குவதாக ஐசிசி அறிவித்துள்ளது.