கிரிக்கெட்

சென்னையில் நடைபெறும் 2-வது டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விற்று தீர்ந்தது + "||" + Tickets for the 2nd Test in Chennai have sold out

சென்னையில் நடைபெறும் 2-வது டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விற்று தீர்ந்தது

சென்னையில் நடைபெறும் 2-வது டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விற்று தீர்ந்தது
சென்னையில் நடைபெறும் 2-வது டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விற்று தீர்ந்தது.
சென்னை,

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் வருகிற 13-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கு 50 சதவீத ரசிகர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்-லைன் மூலம் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது. டிக்கெட் விலை ரூ.100, ரூ.150, ரூ.200 என்று நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. விற்பனை தொடங்கிய அரை மணி நேரத்துக்குள் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விட்டன என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ராமசாமி தெரிவித்தார். போட்டியை காண வரும் ரசிகர்கள் கட்டாயம் முககவசம் அணிந்து இருக்க வேண்டும் என்றும் ஸ்டேடியத்தில் முறையான சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவுறுத்தி இருக்கிறது. ரசிகர்கள் பரிசோதனைக்கு பிறகு தான் அனுமதிக்கப்படுவார்கள். கொரோனாவுக்கான அறிகுறி எதுவும் இருந்தால் அனுமதி அளிக்கப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.