கிரிக்கெட்

உத்தரகாண்ட் அணி தேர்வு விவகாரம்: ஜாபருக்கு கும்பிளே ஆதரவு + "||" + Uttarakhand team selection issue: Kumble supports Jafar

உத்தரகாண்ட் அணி தேர்வு விவகாரம்: ஜாபருக்கு கும்பிளே ஆதரவு

உத்தரகாண்ட் அணி தேர்வு விவகாரம்: ஜாபருக்கு கும்பிளே ஆதரவு
உத்தரகாண்ட் அணி தேர்வு விவகாரம்: ஜாபருக்கு கும்பிளே ஆதரவு.
மும்பை, 

உத்தரகாண்ட் மாநில கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த இந்திய முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் சமீபத்தில் அந்த பதவியை ராஜினாமா செய்தார். ‘அணித் தேர்வில் நிர்வாகிகள் தலையீடு இருக்கிறது. தேர்வு குழுவினரும், செயலாளரும் ஒருதலைபட்சமாக நடந்து கொள்கிறார்கள்’ என்று ஜாபர் குற்றம் சாட்டினார். ஆனால் வாசிம் ஜாபர் குறிப்பிட்ட மதத்தை சேர்ந்த வீரருக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்று உத்தரகாண்ட் கிரிக்கெட் சங்க செயலாளர் மஹிம் வர்மா புகார் கூறினார். இதை மறுத்த வாசிம் ஜாபர், வீரர்களிடம் எனது அணுகுமுறை மதரீதியாக இருந்திருந்தால் என்னை பயிற்சியாளர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கியிருப்பார்கள் என்று பதிலடி கொடுத்தார்.

இந்த நிலையில் இந்த விவகாரத்தில் ஜாபருக்கு இந்திய முன்னாள் கேப்டன் அனில் கும்பிளே ஆதரவு கரம் நீட்டியுள்ளார். கும்பிளே தனது டுவிட்டர் பக்கத்தில், ‘நான் உங்களுடன் இருக்கிறேன். நீங்கள் எல்லாவற்றையும் சரியாக செய்திருக்கிறீர்கள். துரதிர்ஷ்டவசமாக வீரர்கள் உங்களது ஆலோசனையை தவற விடுகிறார்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. இலங்கை அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இந்தியா எடுத்துவிடக் கூடாது - பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
இலங்கை அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டினை ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இந்தியா எடுத்துவிடக் கூடாது என்று பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2. பொங்கல் பண்டிகைக்கு பிறகு பள்ளிகளை திறக்க பெரும்பாலான பெற்றோர் ஆதரவு
பொங்கலுக்கு பிறகு பள்ளிகளை திறக்க பெரும்பாலான பெற்றோர் கருத்து கேட்பு கூட்டத்தில் ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
3. எடியூரப்பாவுக்கு 118 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு: துணை முதல்-மந்திரி கோவிந்த் கார்ஜோள் பேட்டி
யத்னால், உமேஷ் கட்டியை தவிர்த்து முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு, 118 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அளித்துள்ளனர் என்று துணை முதல்-மந்திரி கோவிந்த் கார்ஜோள் தெரிவித்துள்ளார்.
4. விவசாயிகளுக்கு ஆதரவாக வரும் 18-ம் தேதி திமுக தோழமை கட்சிகள் உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஆதரவாக வரும் 18-ம் தேதி திமுக தோழமை கட்சிகளின் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
5. விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக பஞ்சாப் போலீஸ் டி.ஐ.ஜி. ராஜினாமா
விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக பஞ்சாப் போலீஸ் டி.ஐ.ஜி. ராஜினாமா செய்துள்ளார்.