கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: இங்கிலாந்து அணி அறிவிப்பு பேர்ஸ்டோவுக்கு மீண்டும் வாய்ப்பு + "||" + Over 20 cricket against India: England team announcement Burstow has a chance again

இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: இங்கிலாந்து அணி அறிவிப்பு பேர்ஸ்டோவுக்கு மீண்டும் வாய்ப்பு

இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: இங்கிலாந்து அணி அறிவிப்பு பேர்ஸ்டோவுக்கு மீண்டும் வாய்ப்பு
இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: இங்கிலாந்து அணி அறிவிப்பு பேர்ஸ்டோவுக்கு மீண்டும் வாய்ப்பு.
லண்டன், 

இந்தியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடர் முடிந்ததும் ஐந்து 20 ஓவர் போட்டி மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா-இங்கிலாந்து இடையிலான ஐந்து 20 ஓவர் போட்டிகள் மார்ச் 12-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை ஆமதாபாத்தில் நடக்கிறது. இந்த 20 ஓவர் தொடருக்கான இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இந்தியாவுக்கு எதிரான முதல் இரு டெஸ்டில் ஓய்வு அளிக்கப்பட்ட விக்கெட் கீப்பர் ஜானி பேர்ஸ்டோ, ஆல்-ரவுண்டர் சாம் கர்ரன் அணிக்கு திரும்புகிறார்கள். இதே போல் முதலாவது டெஸ்டுடன் தாயகம் திரும்பிய ஜோஸ் பட்லருக்கும் இடம் கிட்டியுள்ளது. பிக்பாஷ் கிரிக்கெட்டில் ரன்மழை பொழிந்த பேட்ஸ்மேன் அலெக்ஸ் ஹாலசுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரது பெயர் பரிசீலிக்கப்படவில்லை. 20 ஓவர் போட்டிக்கான இங்கிலாந்து அணி வீரர்கள் வருகிற 26-ந்தேதி இந்தியாவுக்கு புறப்படுகிறார்கள்.

இங்கிலாந்து 20 ஓவர் போட்டி அணி வருமாறு:- மோர்கன் (கேப்டன்), மொயீன் அலி, ஜோப்ரா ஆர்ச்சர், பேர்ஸ்டோ, சாம் பில்லிங்ஸ், ஜோஸ் பட்லர், சாம் கர்ரன், டாம் கர்ரன், கிறிஸ் ஜோர்டான், லியாம் லிவிங்ஸ்டன், டேவிட் மலான், அடில் ரஷித், ஜாசன் ராய், பென் ஸ்டோக்ஸ், ரீஸ் டாப்லி, மார்க்வுட்.

தொடர்புடைய செய்திகள்

1. ஜிம்பாப்வேக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: தொடரை வென்றது பாகிஸ்தான்
பாகிஸ்தான் - ஜிம்பாப்வே அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஹராரேவில் நேற்று நடந்தது.
2. ஐ.பி.எல். கிரிக்கெட்: ஜடேஜாவின் அபார ஆட்டத்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் 4-வது வெற்றி
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று நடந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூருவை துவம்சம் செய்து அவர்களின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
3. அடுத்த ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து விடைபெறுகிறார், மிதாலிராஜ்
இந்திய பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலிராஜ். 1999-ம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆன அவர் இன்னும் ஆர்வம் குறையாமல் அதே உத்வேகத்துடன் விளையாடி வருகிறார்.
4. 20 ஓவர் கிரிக்கெட்: ஜிம்பாப்வே அணியிடம் பாகிஸ்தான் அதிர்ச்சி தோல்வி
பாகிஸ்தான்-ஜிம்பாப்வே அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஹராரேயில் நேற்று நடந்தது.
5. ஐ.பி.எல். போட்டியில் ஜோப்ரா ஆர்ச்சர் விளையாடமாட்டார்; இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் ஐ.பி.எல். போட்டிக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அங்கம் வகிக்கிறார்.