கிரிக்கெட்

‘முதல் நாளில் இருந்தே சுழற்பந்துவீச்சு எடுபடும்’ இந்திய துணை கேப்டன் ரஹானே பேட்டி + "||" + ‘The spin will be taken from day one’ Interview with India vice-captain Rahane

‘முதல் நாளில் இருந்தே சுழற்பந்துவீச்சு எடுபடும்’ இந்திய துணை கேப்டன் ரஹானே பேட்டி

‘முதல் நாளில் இருந்தே சுழற்பந்துவீச்சு எடுபடும்’ இந்திய துணை கேப்டன் ரஹானே பேட்டி
முதலாவது டெஸ்டில் தடுமாற்றம் கண்ட இந்திய அணியின் துணை கேப்டன் அஜிங்யா ரஹானே சென்னையில் நேற்று அளித்த பேட்டியில்,‘ சொந்த மண்ணில் 2 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறோம்.
முதலாவது டெஸ்டில் தடுமாற்றம் கண்ட இந்திய அணியின் துணை கேப்டன் அஜிங்யா ரஹானே சென்னையில் நேற்று அளித்த பேட்டியில்,‘ சொந்த மண்ணில் 2 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறோம். கடைசியாக உள்ளூரில் நாங்கள் விளையாடிய டெஸ்ட் தொடரில் எனது ஸ்கோரை (2019-ம் ஆண்டில் வங்காளதேசத்துக்கு எதிராக 86, 61 ரன், தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 59 மற்றும் 115 ரன் எடுத்தார்) பார்த்தால் அதில் நான் எப்படி விளையாடி இருக்கிறேன் என்பது உங்களுக்கு தெரியும். எந்த ஒரு தனிப்பட்ட வீரரின் சாதனையை விட ஒரு அணியாக எப்படி செயல்படுகிறோம் என்பதில் தான் எல்லாமே அடங்கி இருக்கிறது. அணிக்கு நம்மால் எப்படி பங்களிப்பு அளிக்க முடியும் என்பதில் தான் எனது முழு கவனமும் உள்ளது. கடந்த 10-15 டெஸ்டுகளில் எனது தனிப்பட்ட செயல்பாட்டை திரும்பிபார்த்தால், நான் கணிசமாக ரன்கள் சேர்த்திருப்பது தெரியும். வெளியில் என்னை பற்றி என்ன விமர்சிக்கிறார்கள் என்பது பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.

இந்த போட்டிக்கான ஆடுகளத்தை பார்க்கவே வித்தியாசமாக தெரிகிறது. நிச்சயம் முதல் நாளில் இருந்தே பந்து சுழன்று திரும்பும். முதல் பகுதியில் ஆடுகளம் எப்படி இருக்கிறது என்பதை பார்த்து அதற்கு ஏற்ப செயல்பட வேண்டும். முதலாவது டெஸ்ட் தோல்வியை மறந்து விட்டு இதில் கவனம் செலுத்த வேண்டும். இங்குள்ள சூழலை நாங்கள் நன்றாக அறிவோம். நாளை (இன்று) எங்களது மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியாக வேண்டும்’ என்றார். 

தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில், ஓட்டுப்பதிவு அமைதியாக நடந்தது போலீஸ் கமிஷனர் பேட்டி
சென்னையில், ஓட்டுப்பதிவு அமைதியாக நடந்தது போலீஸ் கமிஷனர் பேட்டி.
2. நான் காதலில் தோல்வி அடைந்தேன் நடிகை அஞ்சலி பேட்டி
அஞ்சலி நடித்த சைலன்ஸ் படம் ஓ.டி.டி.யில் வெளியானது. தற்போது தமிழில் பூச்சாண்டி படத்தில் நடிக்கிறார். தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களிலும் நடித்து வருகிறார்.
3. வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் கே.பாலகிருஷ்ணன் பேட்டி
வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வது குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்ய உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
4. “குறுக்கு வழியில் வெற்றி பெற வேண்டிய அவசியம் தி.மு.க.வுக்கு இல்லை” சைதாப்பேட்டை தொகுதி வேட்பாளர் மா.சுப்பிரமணியன் பேட்டி
“குறுக்கு வழியில் வெற்றிபெற வேண்டிய அவசியம் தி.மு.க.வுக்கு இல்லை” என்று சைதை துரைசாமியின் குற்றச்சாட்டுக்கு, மா.சுப்பிரமணியன் பதில் அளித்தார்.
5. வருமானவரி சோதனை எந்த சார்பும் இல்லாமல் நடக்கிறது: ‘எடப்பாடி பழனிசாமியை பார்த்து தி.மு.க. பயப்படுகிறது’
எடப்பாடி பழனிசாமியை பார்த்து தி.மு.க. பயப்படுகிறது என்று ‘தந்தி' தொலைக்காட்சிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் அமித்ஷா கூறியுள்ளார்.