கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு + "||" + India opt to bat

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு
இந்திய அணியில் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக சிராஜ் அணியில் இடம் பிடித்துள்ளார்.
சென்னை,

ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் சென்னை சேப்பாக்கத்தில் நடந்த முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து 227 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி இதே சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியுள்ளது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதன்படி, இங்கிலாந்து அணி முதலில் பந்து வீசுகிறது. 

இரு அணிகளிலும் விளையடும் வீரர்கள் விவரம்:

இந்தியா

ரோகித் சர்மா, சுப்மான் கில், புஜாரா, விராட் கோலி, ரகானே, ரிஷப் பண்ட், அக்சர் படேல், அஷ்வின், குல்தீப் யாதவ், இஷாந்த் சர்மா, முகம்மது சிராஜ்

இங்கிலாந்து:

ரோரி பர்ன்ஸ், டொம்னிக் சிப்லே, டேனியல் லாரன்ஸ், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஆலி போப், பென் ஃபோக்ஸ் மோயின் அலி, பிராட், ஜாக் லீச், ஆலி ஸ்டோன்

ரசிகர்களுக்கு அனுமதி

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதலாவது டெஸ்டில் ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை. விளையாட்டு நிகழ்ச்சிகளை நேரில் பார்வையிட 50 சதவீதம் அனுமதிக்கலாம் என்று தமிழக அரசின் அறிவிப்பை தொடர்ந்து 2-வது டெஸ்டுக்கு ரசிகர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். ஆன் லைனில் விற்கப்பட்ட டிக்கெட் அரைமணி நேரத்தில் விற்று தீர்ந்தது. தினமும் 14 ஆயிரம் ரசிகர்கள் வரை நேரில் போட்டியை கண்டு களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்களின் வருகை இந்திய அணி வீரர்களுக்கு எழுச்சி பெறுவதற்கான உத்வேகத்தை கொடுக்கும் என்று நம்பலாம்.

எஞ்சிய மூன்று டெஸ்டுகளில் ஒன்றில் தோற்றாலும் இ்ந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியாது. குறைந்தது 2 வெற்றி, ஒரு டிரா என்ற வகையிலாவது முடிவு காண வேண்டும். அந்த வகையில் இந்த டெஸ்ட் இந்திய அணிக்கு வாழ்வா? சாவா? போராட்டம் என்றே சொல்லலாம்.


தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் தடுப்பூசி திருவிழாவில் 1.28 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது
இந்தியாவில் தடுப்பூசி திருவிழாவில் 1.28 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. இந்தியாவில் இதுவரை இல்லாத கொரோனா பாதிப்பின் புதிய உச்சம் 24 மணி நேரத்தில் 2 லட்சத்தை தாண்டியது
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,00,739 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,61,736 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,61,736 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
4. இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரிக்க 2 முக்கிய காரணங்கள் - ‘எய்ம்ஸ்’ இயக்குனர் கருத்து
கொரோனா விதிமுறைகளை பின்பற்றாததும், உருமாறிய கொரோனாவும்தான் இந்தியாவில் தொற்று அதிகரிக்க முக்கிய காரணங்கள் என்று ‘எய்ம்ஸ்’ இயக்குனர் கூறியுள்ளார்.
5. கொரோனா பரவல் அதிகரிப்பால் உள்நாட்டு விமானங்களில் புதிய கட்டுப்பாடு
இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.