கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: ரோகித் சர்மா சதம் அடித்து அசத்தல் + "||" + century #7 in Tests for Rohit.

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: ரோகித் சர்மா சதம் அடித்து அசத்தல்

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்:  ரோகித் சர்மா சதம் அடித்து அசத்தல்
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா சதம் அடித்து அசத்தினார்.
சென்னை,

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணிக்கு துவக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. இளம் வீரர் சுப்மான் கில் ரன் எதுவும் இன்றி ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். 

இதையடுத்து, ரோகித் சர்மாவுடன் - புஜாரா ஜோடி சேர்ந்தார். புஜாரா வழக்கம் போல தடுப்பாட்டம் ஆட ரோகித் சர்மா சற்று அதிரடியாக ஆடினார் நிதானமாக ஆடி வந்த புஜாரா 21 ரன்களில் ஜேக் லீச் பந்தில் ஆட்டமிழந்தார்.  4-வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய கேப்டன் கோலி, மோயின் அலி சுழலில் சிக்கி போல்டு ஆனார். 86-ரன்களுக்குள் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.  

இதனை தொடர்ந்து, ரோகித் சர்மாவுடன்  துணை கேப்டன் ரகானே ஜோடி சேர்ந்தார். ஒருபுறம் ரகானே பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ரோகித் சர்மா ஏதுவான பந்துகளை பவுண்டரிக்கு விரட்டியதால், ரன் வேகம் சீராக இருந்தது. தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா சதம் அடித்து அசத்தினார். சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ரோகித் சர்மா அடிக்கும் 7-வது சதம் இதுவாகும்.  

இந்திய அணி  41.3 ஓவர்கள் நிலவரப்படி 3 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்துள்ளது. ரோகித் சர்மா 100 ரன்களுடனும் ரகானே 26 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

1. இந்தோ-பசிபிக் பகுதிக்கு புதிய பாதுகாப்பு கூட்டாண்மை அறிவிப்பு!
அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் இணைந்து இந்தோ-பசிபிக் பகுதிக்கு புதிய பாதுகாப்பு கூட்டாண்மையை அறிவித்துள்ளது.
2. கொரோனா பாதிப்பு எதிரொலி: இந்தியாவுடனான 5-வது டெஸ்ட் போட்டி ரத்து- இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்
கொரோனா பாதிப்பு எதிரொலியாக இந்தியாவுடனான 5-வது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்படுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்து உள்ளது.
3. பரபரப்பான கட்டத்தில் ஓவல் டெஸ்ட்; இங்கிலாந்து வெற்றிக்கு இன்னும் 291 ரன்கள் தேவை
இந்தியா 2-வது இன்னிங்சில் 466 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, இங்கிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக 368 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது.
4. விறுவிறுப்பான கட்டத்தை நோக்கி ஓவல் டெஸ்ட்: 3 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 270/3
இந்தியா- இங்கிலாந்து இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
5. ஓவல் டெஸ்ட்: 2 ஆம் நாள் முடிவில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 43-ரன்கள் சேர்ப்பு
2-ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 16 ஓவர்கள் நிலவரப்படி விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் சேர்த்துள்ளது.