கிரிக்கெட்

20 ஓவர் கிரிக்கெட்: பாகிஸ்தான் அணிக்கு பதிலடி கொடுத்தது தென்ஆப்பிரிக்கா + "||" + 20 over cricket: South Africa retaliate against Pakistan

20 ஓவர் கிரிக்கெட்: பாகிஸ்தான் அணிக்கு பதிலடி கொடுத்தது தென்ஆப்பிரிக்கா

20 ஓவர் கிரிக்கெட்: பாகிஸ்தான் அணிக்கு பதிலடி கொடுத்தது தென்ஆப்பிரிக்கா
பாகிஸ்தான்-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி லாகூரில் நேற்று நடந்தது.
லாகூர், 

பாகிஸ்தான்-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி லாகூரில் நேற்று நடந்தது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 51 ரன்கள் சேர்த்தார். தென்ஆப்பிரிக்க அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் பிரிட்டோரியஸ் 17 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார். சர்வதேச 20 ஓவர் போட்டியில் தென்ஆப்பிரிக்க வீரரின் சிறப்பான பந்து வீச்சு இதுவாகும்.

பின்னர் இலக்கை நோக்கி ஆடிய தென்ஆப்பிரிக்க அணி 16.2 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 145 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன், முதலாவது ஆட்டத்தில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுத்தது. இவ்விரு அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி இதே மைதானத்தில் இன்று நடக்கிறது. 

தொடர்புடைய செய்திகள்

1. கடைசி ஒரு நாள் கிரிக்கெட்டில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது பாகிஸ்தான்
தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் நேற்று நடந்தது.
2. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: பாகிஸ்தான் அணி கடைசி பந்தில் வெற்றி
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி கடைசி பந்தில் வெற்றி பெற்றது.
3. வங்காளதேசத்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: 2-வது ஆட்டத்திலும் நியூசிலாந்து வெற்றி
வங்காளதேசத்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: 2-வது ஆட்டத்திலும் நியூசிலாந்து வெற்றி மழையால் இலக்கை நிர்ணயிப்பதில் குழப்பம்.
4. இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: இந்தியா 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
5. இங்கிலாந்து அணிக்கு 318 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 317-ரன்கள் குவித்துள்ளது.