கிரிக்கெட்

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட்: வங்காளதேசம் 296 ரன்னில் ஆல்-அவுட் + "||" + Test against West Indies: Bangladesh all-out for 296 runs

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட்: வங்காளதேசம் 296 ரன்னில் ஆல்-அவுட்

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட்: வங்காளதேசம் 296 ரன்னில் ஆல்-அவுட்
வெஸ்ட் இண்டீஸ் - வங்காளதேசம் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டாக்காவில் நடந்து வருகிறது.
டாக்கா, 

வெஸ்ட் இண்டீஸ் - வங்காளதேசம் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டாக்காவில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் 409 ரன்கள் குவித்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய வங்காளதேசம் 2-வது நாள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 105 ரன்கள் எடுத்திருந்தது. 3-வது நாளான நேற்று தொடர்ந்து விளையாடிய வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் 296 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. லிட்டான் தாஸ் (71 ரன்), மெஹிதி ஹசன் மிராஸ் (57 ரன்) அரைசதம் அடித்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் ரகீம் கார்ன்வால் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். அடுத்து 113 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுக்கு 41 ரன்கள் எடுத்து மொத்தம் 154 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 4-வது நாள் ஆட்டம் இன்று நடைபெறும்.